குறிப்பிட்ட காரணம் இல்லாத முதுகு வலிக்கு தசை தளர்ச்சி மாத்திரைகளின் பங்கு

நாள்பட்ட அல்லது கடுமையான முதுகு வலிக்கு தசை தளர்ச்சி மாத்திரைகள் குறுகிய கால நோய்க்குறி நிவாரணம் அளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும். இருந்தபோதிலும், அதனால் ஏற்படும் பக்க விளைவுகளான தலைசுற்றல், உடல் அயற்சி போன்றவைகள் அதிகம். தசை தளர்ச்சி மாத்திரைகளை மிகுந்த எச்சரிக்கையுடன் எடுத்து கொள்ள வேண்டும். தசை தளர்ச்சி மாத்திரைகளை எடுத்துக்கொள்வதில் உள்ள நிறை குறைகளை ஆராய்ந்து, ஒரு நோயாளிக்கு இது அவசியமா, இல்லையா என்ற முடிவை மருத்துவரின் விருப்பத்திற்கு விட்டு விட வேண்டும். தசை தளர்ச்சியடைய செய்யும் மாத்திரைகளின் பயன்களை வலி நிவாரணிகள் அல்லது அழற்சியை கட்டுப்படுத்தும் மாத்திரைகளோடு ஒப்பிட உயர்தர மருத்துவ ஆய்வுகள் தேவை. மேலும் இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் இந்த மருந்துகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளின் நிகழ்வு மற்றும் தீவிரத்தை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: தி. செந்தில்குமார் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு.

Tools
Information