தசை நோய்க்கான வலிமை பயிற்சி அல்லது வரிவான ஏரோபிக் உடற்பயிற்சி

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

தசையின் வலிமை மற்றும் ,உழைப்பாற்றலை மேம்படுத்த செய்யப்படும் வலிமை பயிற்சி, அல்லது இதயம் மற்றும் நுரையீரலின் உழைப்பாற்றலை மேம்படுத்த வடிவமைக்க பட்ட ஏரோபிக் உடற்பயிற்சிகள் தசை நோயால் பாதிக்கபட்ட மக்களுக்கு மேலும் தசை பாதிப்பு வராமல் தடுக்கவும், மேலும் உடற்தகுதி முன்னேற்றதிற்கும் வழி வகுக்கலாம். எனினும், தசை நோயால் பாதிக்கபட்ட நோயாளிகள் மற்றும் மருத்துவர்களும் தசையை அதிகம் பயன்படுத்தல் குறித்து அஞ்சி உடற்பயிற்சி செய்யவதை எச்சரிக்கையாக அணுகுகிறார்கள். இந்த புதுப்பிக்கப்பட்ட திறனாய்வு (2 ஜூலை 2012 அன்று கடைசியாக தேடல் செய்யப்பட்டது) முகம் ,தோள் ,சிறகெலும்பின் தசை திசு சிதைவு(FSDH) மற்றும் மயோடோனிக் திசு இறப்பு (dystrophy) (101 பங்கேற்பாளர்கள்)உள்ள நபர்களுக்கு வலிமை கூட்டும் பயிற்சி அளிக்கும் இரண்டு தகுதியுள்ள ஆராய்ச்சிகளையும் இழைத்தணுக்கு தசை திசு சிதைவு (18 பங்கேற்பாளர்கள்) மற்றும் மயோடோனிக் திசு இறப்பு (dystophy) வகை 1 (35 பங்கேற்பாளர்கள்) நோயாளிகளுக்கு தசை வலிமை கூட்டும் உடற்பயிற்சியுடன் ஏரோபிக் உடற்பயிற்சியை இணைத்து செய்தஇரண்டு ஆராய்ச்சிகளையும் பல-தசைத்திசு அழிவு மற்றும் சரும தசையழல் பல-தசைத்திசு அழிவு (14 பங்கேற்பாளர்கள்) நோயாளிகளுக்கு ஏரோபிக் உடற்பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு ஆராய்ச்சியினையும் உள்ளடக்கியது. மிதமான தீவிரத்துடன் செய்யப்படும் வலிமை கூட்டும் பயிற்சிகள் மயோடோனிக் திசு இறப்பு (dystrophy) அல்லது FSDHஉடன் இருக்கும் நோயாளிகளின் தசைக்கும், ஏரோபிக் பயிற்சிகள் சரும தசையழல் அல்லது பல-தசைத்திசு அழிவு நோயாளிகளிகளின் தசைக்கும் எவ்வித தீங்கும் விளைவிப்பதுபோல் தோன்றவில்லை என இவ்வாராய்ச்சிகள் காண்பிக்கின்றன. தசை வலிமை கூட்டும் உடற்பயிற்சியை ஏரோபிக் உடற்பயிற்சியுடன் இணைத்து செய்வது வகை 1 மயோடோனிக் திசு இறப்பு (dystophy) நோய்க்கு பாதுகாப்பானதாக தோன்றுகிறது,மேலும் இது இழைத்தணுக்கு தசை அழிவு நோய்க்கு உழைப்பாற்றலை அதிகரிக்கலாம். FSHD, மயோடோனிக் திசு இறப்பு (dystophy), இழைத்தணுக்கு கோளாறுகள் மற்றும் சரும தசையழல் மற்றும் பல-தசைத்திசு அழிவு (polymyositis) போன்ற நோய்களுக்கு தசை வலிமை கூட்டும் உடற்பயிற்சினால் தசைக்கு தீங்கு ஏதும் இல்லை என்று ஆதாரங்கள் தெரிவிக்கிறது ஆனாலும் இதனின் முழுமையான பயனை தீர்மானிக்க மேலும் ஆராய்ச்சிகள் தேவை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: பிறைசுடன் ஜெயகாந்தன் க. ஹரிஓம் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு