கைக்கு அளிக்கப்படும் தொடர்ச்சியான மீயொலி சிகிச்சை, முடக்கு வாதம் (ருமாட்டாயிடு ஆர்த்திரைடிஸ்) கொண்ட மக்களில் கைப்பிடி வலிமைக்கு நன்மையளிக்கிறது.

அழற்சி-எதிர்ப்பு மற்றும் வலி நிவாரண விளைவுகளின் அடிப்படையில், முடக்கு வாத நோய்க்குறி சார்ந்த சிகிச்சைக்கு, தகுதி வாய்ந்த மருத்துவ வல்லுநர்களால் தேர்ந்தெடுக்கப்படும் சிகிச்சை முறைகளுள் மீயொலியும் ஒன்றாகும். கையின் பின்னங்கை மற்றும் உள்ளங்கை பரப்புகளில் நீர் வழியே அளிக்கப்பட்ட தொடர்ச்சியான மீயொலி சிகிச்சையை , போலி சிகிச்சையுடன் ஒப்பிட்டபோது கைப்பிடி வலிமையை அதிகரித்தது என்று இரண்டு சமவாய்ப்பு கட்டுபாட்டு சோதனைகளைக் (RCT) கொண்ட இந்த திறனாய்வு காட்டியது. இந்த நன்மை, கூட்டு சிகிச்சையில் (உடற்பயிற்சி,மெழுகு குளியல், பாரடிக் (Faradic) கை குளியல்) தெளிவாக புலப்படவில்லை. மேலும் மீயொலி, மணிக்கட்டு புறமடக்குதல் வரம்பை விளிம்பளவு அதிகரித்து, காலை மூட்டு விறைப்பைக் குறைத்து, மேலும், வீங்கிய மற்றும் வலிமிகுந்த மூட்டுகளின் எண்ணிக்கையைக் குறைத்தது. திறனாய்வின் முடிவுகள், சில ஆய்வுகள், குறைந்த மாதிரி அளவு, மற்றும் ஆய்வு முறை வரம்புகளால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information