திறந்த கை கால் எலும்பு முறிவுகளின் நோய் தொற்றை தடுப்பதற்கான ஆண்டிபயாடிக்ஸ்

திறந்த கை கால் எலும்பு முறிவுகளைத் தொடர்ந்து, புண் மற்றும் எலும்பு தொற்றுகள் பொதுவாக ஏற்படும் சிக்கல்களாகும். புண்ணை கழுவுதல் (பாசனம்), புண்ணை மற்றும் எலும்பு முறிவை சுத்தப்படுத்துதல் (அறுவை சிகிச்சை மூலம் காயத் துப்புரவு), மற்றும் தேவைக்கேற்ப, எலும்பு முறிவு நிலைப்படுத்துதல் போன்றவற்றை உள்ளடக்கிய வழக்கமான மேலாண்மை திட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டிபயாடிக்ஸ் பயன்பாடு 20 வருடங்களுக்கும் மேலாக முன்னேறிய நாடுகளில் இருந்து வருகிறது. ஆண்டிபயாடிக்ஸ் இல்லாமை அல்லது போலி மருந்துடன் ஒப்பிடுகையில், ஆண்டிபயாடிக்ஸ் புண் தொற்றுகளின் நிகழ்வை குறைப்பதில் திறன் மிக்கதாக இருக்கின்றன என்று எட்டு சோதனைகளில் 1106 பங்கேற்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட தரவை கொண்டிருக்கும் இந்த திறனாய்வு கண்டது. எலும்பு தொற்று, அல்லது நீண்ட-கால உடல்நல குறைவு (நோயுறுதல்) ஆகியவற்றை அறிக்கையிடும் எந்த ஆய்வுகளும் கண்டறியப்படவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய்,ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information