நீரிழிவு நோய் செவிலிய வல்லுநர்கள்

பல ஆரோக்கிய பராமரிப்பு அமைப்புகளில், நீரிழிவு நோய் கொண்ட மக்களுக்கு விளக்கக் கல்வி மற்றும் ஆதரவு சேவைகளை செவிலிய வல்லுநர்கள் வழங்குவர். மக்கள் தங்களின் நீரிழிவு நோயை சுயமாக-மேலாண்மை செய்துக் கொள்ள உதவுவதே இதனுடைய ஒரு முக்கிய நோக்கமாகும். எனினும், நீரிழிவு நோய் கொண்ட இளம் வளர் பருவத்தினர் மற்றும் வயது வந்தவர்கள் நீரிழிவு நோய் செவிலிய வல்லுநர்களிடமிருந்து பெற்ற பராமரிப்பின் பலனிற்கான உறுதியான ஆதாரத்தை இந்த சோதனைகளின் திறனாய்வு காணவில்லை. குறுகிய-காலக் கட்ட நன்மைகளுக்கு சாத்தியமிருந்தாலும், இது நீண்ட-காலக் கட்ட நன்மைகளுக்கு வழி வகுக்கும் என்று காட்டப்படவில்லை. மருத்துவமனைகள் அல்லது ஆரம்ப பராமரிப்பு மையங்களில் எந்த செவிலிய வல்லுநர் உள்ளீடும் இல்லாது வழக்கமான பராமரிப்பை பெற்றவர்களுடன் ஒப்பிடுகையில், நீரிழிவு நோய் செவிலிய வல்லுநர்கள் பராமரிப்பு பெற்ற மக்கள் ஆரோக்கிய மேம்பாட்டை அடையவில்லை என்று தெரிகிறது. வாழ்க்கைத் தர அளவீடுகளுக்கு எந்த தரவும் காணப்படவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information