நிறை காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு நீள்தொடர் பலப்படி நிறைவுறா கொழுப்பு அமிலத்தின் (Longchain polyunsaturated fatty acid LCPUFA) சேர்க்கை

திறனாய்வு கேள்விநிறை காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு LCPUFA சேர்க்காத பால்பொடி பால் அளிப்பதை ஒப்பிடும்போது நீள்தொடர் பலப்படி நிறைவுறா கொழுப்பு அமிலத்தின் (Longchain polyunsaturated fatty acid) சேர்க்கை, பார்வை திறன் அதிகரித்தல் மற்றும் ஒட்டு மொத்த நரம்பு வளர்ச்சிக்கு உதவுமா?

பின்புலம்நீண்ட சங்கிலி பலப்படி நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் (LCPUFA) ஒரு வகையான கொழுப்பு அது பிறந்த குழந்தையின் மூளை மற்றும் பார்வை வளர்ச்சிக்கு மிக அவசியம். இவை (LCPUFA) தாய்ப்பாலில் தேவையான அளவு உள்ளது. ஆகையால் இதனை குழந்தைகளுக்கான பால்பொடி பாலைவிட சிறந்தது என்று கருதப்படுகிறது. LCPUFA சேர்க்கப்பட்ட குழந்தைகள் பால்பொடிகள் சில வியாபார ரீதியாக கிடைக் கிறது.

ஆய்வு பண்புகள் நிறை காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு(≥ 37 வாரங்கள் கர்ப்பத்திற்கு பிறந்த குழந்தைகள்) LCPUFA சேர்க்காத பால்பொடி பால் அளிப்பதின் விளைபயன்களையும் , நீள்தொடர் பலப்படி நிறைவுறா கொழுப்பு அமிலத்தினை (Longchain polyunsaturated fatty acid) சேர்த்து அளிப்பதின் விளைபயங்களையும் ஒப்பிட்ட ஆய்வுகளை இந்த திறனாய்வு ஆராய்ந்தது.

முதன்மை முடிவு:நிறை காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு LCPUFA சேர்க்காத பால்பொடி பால் அளிப்பதையும் , நீள்தொடர் பலப்படி நிறைவுறா கொழுப்பு அமிலத்தினை (Longchain polyunsaturated fatty acid) சேர்த்து அளிப்பதையும் ஒப்பிடும்போது விளைவுபயன்களில் எந்த மாற்றமும் இல்லை என்று திறனாய்வு ஆசிரியர்கள் கண்டறிந்தனர்.

ஆதாரங்களின் தரம்: ஒட்டுமொத்த ஆதாரத்தின் தரம் குறைவான'-தென்று நாங்கள் மதிப்பிட்டோம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information