மருத்துவமனையிலிருந்து விடுவிப்பதற்கான திட்டமிடல்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

பின்புலம்

மருத்துவமனையிலிருந்து வெளியேறும் ஒவ்வொரு நோயாளிக்கும், செலவுகளைக் அடக்கவும், மற்றும் நோயாளி விளைவுகளை மேம்படுத்தவும் நோக்கம் கொண்டு தனிப்பட்ட திட்டத்தை உருவாக்குவதே விடுவிப்பதற்கான திட்டமிடல் ஆகும். விடுவிப்பதற்கான திட்டமிடல் , நோயாளிகள் அவர்களின் பராமரிப்பின் பொருத்தமான நேரத்தில் வெளியேற வேண்டும் மற்றும் விடுவிப்பிற்கு பின்னான சேவைகளுடைய வசதியை போதுமான முன்னறிவிப்போடு ஒழுங்கு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

குறிக்கோள்கள்

மருத்துவமனையிலிருந்து வெளியேறும் நோயாளிகளுக்கு தனிப்பட்ட திட்டங்களை உருவாக்குவதின் விளைவை காண, நாங்கள் சீரற்ற சோதனைகளை முறைப்படுத்தப்பட்ட வழியில் தேடினோம். இது, அசல் திறனாய்வின் மூன்றாவது புதுப்பித்தல் ஆகும்.

முக்கிய முடிவுகள்

தனிப்பட்ட விடுவிப்பதற்கான திட்டமிடலுக்கு எதிராக வழக்கமான விடுவிப்பதற்கான திட்டமிடலை ஒப்பிட்ட 30 சோதனைகளை நாங்கள் கண்டோம். அவற்றில், இருபது ஆய்வுகள் வயதானவர்களை சேர்த்திருந்தன.

ஆசிரியர்களுடைய முடிவுரைகள் 

தனிப்பட்ட விடுவிப்பதற்கான திட்டம், மருத்துவமனையில் தங்கியிருக்கும் கால அளவு (சராசரி வித்தியாசம் -0.73 நாட்கள்), மற்றும் ஒரு மருத்துவ நிலைமையோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த வயதான நோயாளிகளின் மறு சேர்ப்பு விகிதங்களை சிறிதளவு குறைக்கக் கூடும், மற்றும் நோயாளி திருப்திகரத்தை அதிகரிக்கக் கூடும். சிறிது ஆதாரமே ஆதரவாக இருந்தாலும், அது, ஆரோக்கிய வல்லுநர்களின் திருப்தியையும் அதிகரிக்கக் கூடும். விடுவிப்பதற்கான திட்டமிடல் ஆரோக்கிய சேவைகளின் செலவுகளை குறைக்குமா என்பது பற்றி தெளிவாக இல்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.