நிக்கோட்டின் மாற்று சிகிச்சை (NRT) புகைப்பிடிப்பதை நிறுத்த உதவுமா?

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

சிகரெட்டுக்குப் பதிலாக நிகோடின் உபயோகித்து புகைப்பதை நிறுத்தினால் உண்டாகும் மீளப்பெறும் அறிகுறிகளைக் குறைப்பதே நிக்கோட்டின் மாற்று சிகிச்சை (NRT)யின் நோக்கம். NRT நிகோடினை மெதுவாக செலுத்தும் தோல் திட்டுகளாக கிடைக்கிறது. மற்றும் மெல்லும் கோந்து (chewing gum), நாசி மற்றும் வாய்வழி ஸ்ப்ரே, உறிஞ்சிகள், சர்க்கரை கலந்த மருந்து மாத்திரைகள் / மாத்திரைகளாகவும் கிடைக்கிறது. இவை அனைத்தும் தோல் திட்டுகளைவிட விரைவாக, ஆனால் புகைப்பதை விட மெதுவாக நிகோட்டினை மூளைக்கு அனுப்பும். 50,000 பேர் கொண்ட 150 NRT ஆய்வுகளை இந்த திறனாய்வின் முக்கிய பகுப்பாய்வுக்கு சேர்த்துக்கொண்டோம். அனைத்துவித NTR களும் ஒருவர் புகைப்பதை நிறுத்தும் முயற்சியில் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது என்பதற்கான சான்றுகளை நாங்கள் கண்டோம். 50-70% புகைப்பதை நிறுத்தும் வாய்ப்பை இது அதிகரிக்கும். வெவ்வேறு வடிவிலுள்ள NRT களுக்கிடையே, திறனில் எந்த வித்தியாசமும் இல்லை என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன, மேலும் எட்டு வாரங்களுக்கு மேல் திட்டுகள் உபோகித்தல் பயன் அளிக்காது என்றும் தெரிவிக்கின்றன. கூடுதல் ஆலோசனை வழங்கல் அல்லது அது இல்லாமல் NRT வேலைசெய்யும், மற்றும் இதற்கு மருத்துவர் பரிந்துரை தேவையில்லை. அதிகமாக புகைபவர்களுக்கு அதிக அளவு NRT வேலைசெய்கிறது. NRT உபயோகிப்பவர்கள் நிறுத்த முயற்சிக்கும்போது நிகோட்டின் திட்டு அல்லது வேகமாக செயல்படும் வகை NRT அல்லது திட்டுடன் புப்ரோபியன் உளச்சோர்வு போக்கிகள் சேர்த்து எடுத்துக் கொண்டால் புகைப்பதை நிறுத்தும் வாய்ப்பு அதிகரிக்கும். திட்டமிட்ட தேதிக்கு சில காலம் முன் NRT ஆரம்பிப்பது புகைப்பதை நிறுத்துவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. NRT உபோகிப்பதால் உண்டாகும் பக்க விளைவுகள் அதன் வகையை பொறுத்து இருக்கும். திட்டுகளால் ஏற்படும் தோல் எரிச்சல், மெல்லும் கோந்து (gum) மற்றும் மாத்திரைகளால் வாயின் உள்புறம் ஏற்படும் எரிச்சல் போன்ற பக்க விளைவுகள் இதனுள் அடங்கும். NRT யினால் மாரடைப்பு வரக்கூடிய ஆபத்துக்கூறு அதிகரிக்கும் என்று கூற ஆதாரம் இல்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர்