முக-முகமாய் பார்ப்பதற்கு ஒரு பாதுகாப்பான மாற்றாக தொலைப்பேசி அல்லது இணைய பரிசோதிப்புகள் இருக்குமா?

எடுத்துச் செல்ல வேண்டிய செய்தி இந்த ஆராய்ச்சி கேள்விக்கு பதிலளிக்க முயற்சித்த ஆய்வுகள், இரண்டு விதமான பரிசோதிப்புகளுக்கிடையே முக்கியமான வித்தியாசங்களை காட்டவில்லை. எனினும், அவற்றின் தீங்குகள் அல்லது நன்மைகள் இடையேயான வித்தியாசங்களை வகுக்க போதுமான தகவல் இல்லை. இந்த கட்டத்தில், தொலைப்பேசி அல்லது இணையம் வழியாக நடத்தப்படும் ஆஸ்துமா பரிசோதிப்புகள், வழக்கமான முக-முகமான அமர்வுகளுக்கு ஒரு பாதுகாப்பான மாற்றாக இருக்குமா அல்லது இல்லையா என்பதை எங்களால் கூற முடியாது.

பின்புலம் அறிகுறிகள் மற்றும் மூச்சிழுப்பு மருந்துகளின் பயன்பாடு பற்றிய தொடரலுக்கு ஒரு மருத்துவர் அல்லது ஆஸ்துமா செவிலியருடன் சீரான தொடர்பில் இருப்பது முக்கியமாகும். எண்ணிக்கையில் அதிகரித்து வரும் ஆஸ்துமா நோய் கொண்ட மக்கள் மற்றும் பிற நீண்டக்-கால ஆரோக்கிய நிலைமைகளை நிர்வகிக்கும் ஒரு வழியாக தொலைப்பேசி மற்றும் இணைய தொழில்நுட்பங்கள் இருக்கக் கூடும். இவை 'தொலைத்தூர மறு ஆய்வுகள் ' அல்லது இ-அமர்வுகள் என்று குறிக்கப்படுகின்றன, மற்றும் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் இடையே மிக எளிதாக தொடர்பை வைத்திருப்பதற்கு ஒரு வழியாக இருக்கக் கூடும், ஆனால், முக-முகமான சந்திப்பை போல் அது சிறந்ததாக இருக்குமா என்று எங்களுக்கு தெரியாது.

ஆய்வு பண்புகள் 2100 பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய மொத்தம் ஆறு ஆய்வுகளை நாங்கள் கண்டோம். 792 மக்களை உள்ளடக்கின நான்கு ஆய்வுகள், முக்கிய முடிவுகளுக்கு கூட்டி சேர்க்கப்படலாம், மற்றும் பிற இரண்டு ஆய்வுகள் (எண்ணிக்கை=1213 மற்றும் எண்ணிக்கை=95) மிகவும் வித்தியாசமாக ஆய்வு வடிவமைப்புகளைக் கொண்டிருந்த காரணத்தினால், அவை தனித் தனியாக பார்க்கப்பட்டன. கூட்டி சேர்க்கப்பட்ட நான்கு ஆய்வுகளிலிருந்த மக்கள், பொதுவாக, வழக்கமான மருந்துகளை எடுத்துக் கொண்டனர், மற்றும் கடுமையான ஆஸ்துமா அல்லது பிற நுரையீரல் நோய்கள் கொண்டிருந்தவர்களை நாங்கள் விலக்கினோம். முக்கியமான நான்கு ஆய்வுகளுடன், மிக வித்தியாசமான வடிவமைப்புகளைக் கொண்டிருந்த பிற இரண்டு ஆய்வுகளை நாங்கள் தனியாக கண்டோம். ஒன்றில், ஆஸ்துமா கொண்ட மக்கள், ஒரு தொலைப்பேசி பரிசோதிப்புக்கு அல்லது ஒரு அவர்கள் வழக்கம் போல சிகிச்சையகங்களுக்கு வந்த போது, ஒரு பயிற்சி அமர்விற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதை ஒப்பிட்ட ஒரு நடைமுறையைக் கொண்டிருந்தது; மற்றும் இன்னொன்று, மக்களின் வாய் வழி ஸ்டீராய்டுகளின் அளவையை குறைத்த போது, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களை கண்காணிப்பதை குறிப்பாக கண்டது. கடைசியாக, நாங்கள் 24 நவம்பர் 2015-ல் ஆய்வுகளுக்கு பார்த்தோம்.

முக்கிய முடிவுகள் முக-முகமாய் பார்க்கப்பட்டவர்களைக் காட்டிலும், தொலைப்பேசி அல்லது இணையம் வழியாக பரிசோதிப்பைக் கொண்ட மக்கள், ஒரு ஆஸ்துமா நிகழ்வுக்கு வாய் வழி கார்டிகோஸ்டீராய்ட்களின் தேவைக்கு அதிக அல்லது குறைந்த அளவு சாத்தியத்தை கொண்டிருந்தார்களா அல்லது இல்லையா என்பதை எங்களால் சொல்ல முடியவில்லை, மற்றும் அநேக காரணங்களுக்காக முடிவை பற்றி நாங்கள் உறுதியற்று உள்ளோம். முக-முகமான அமர்வுகளை போன்றே தொலைத்தூர பரிசோதிப்புகள் சிறப்பாக இருக்கும் என்பதைக் கூறுவதற்கு, அவசர சிகிச்சை துறையில் அல்லது மருத்துவமனையில் அல்லது ஒரு குறிக்கப்படாத சந்திப்பில் அவர்களின் மருத்துவரை கண்ட அமர்வில் சிகிச்சை தேவைப்பட்ட ஆஸ்துமா பாதிப்புகளைக் மிக குறைந்த மக்கள் கொண்டிருந்தனர், ஆஸ்துமா கட்டுப்பாடு, அல்லது வாழ்க்கைத் தரத்தில் எந்த வித்தியாசமும் இருப்பதாக தெரியவில்லை, ஆனால், இந்த விளைவுகளின் மேல், முக-முகமான அமர்வுகளை போன்று தொலைத்தூர பரிசோதிப்புகள் நன்றாக இருக்கவில்லை என்ற சாத்தியத்தை எங்களால் வேறுப்படுத்த முடிகிறது. அனைத்து ஆதாரமும் குறைந்தது முதல் மிதமான தரத்தைக் கொண்டிருந்ததாக கருதப்பட்டது. ஒரு தொலைப்பேசி பரிசோதிப்பை ஒரு தேர்வாக மக்களுக்கு கொடுத்ததின் சாத்தியமான நன்மையை சோதித்த ஆய்வு, அது மறு ஆய்வு செய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது என்று காட்டியது, ஆனால் ஆஸ்துமா விளைவுகளின் மேல் ஒரு ஒட்டுமொத்த நன்மையை காட்டவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information