ஹீமோடையாலிஸிஸ் நோயாளிகளுக்கு முன்கூட்டிய பராமரிப்பு திட்டமிடல்

பின்புலம்

நாள்பட்ட மற்றும் இறுதிக்கட்ட சிறுநீரக நோய் கொண்ட மக்கள் திருப்ப முடியாத சிறு நீரக பாதிப்பை கொண்டிருப்பர் மற்றும் சிறு நீரக மாற்று சிகிச்சை தேவைப்படுபவராய் இருப்பர். முன்னேறிய நாடுகளில், இறுதிக்கட்ட சிறு நீரக நோய்க்கு ஹீமோடையாலிஸிஸ் ஒரு மிக பொதுவான சிகிச்சையாக உருவாகியுள்ளது. ஹீமோடையாலிஸிஸ் உயிர்-காக்கும் தன்மையை கொண்டிருந்தாலும், அது நோயாளிகளுக்கு குறிப்பிடத்தகுந்த உடல் மற்றும் உளவியல் சுமையாக இருக்கும். முன்கூட்டிய பராமரிப்பு திட்டமிடல் என்பது ஒரு நபர் ஏதேனும் ஒரு காரணத்தினால், முடிவெடுப்பதில் பங்கேற்க முடியாமல் போனால், அவரின் எதிர்கால நலம், மற்றும் அவர் விரும்பிய ஆரோக்கிய பராமரிப்பின் அளவு மற்றும் வாழ்க்கைத் தரம் போன்றவற்றில் தனிப்பட்ட பராமரிப்பு முடிவுகளை திட்டமிடுவது ஆகும். முன்கூட்டிய பராமரிப்பு இலக்குகள் நேரத்திற்கேற்ப மாறக் கூடும் மற்றும் முன்கூட்டிய பராமரிப்பு திட்டமிடல் என்பது இத்தகைய மாற்றங்களை கவனத்திற்கு கொண்டு வந்து மற்றும் நேரத்திற்கு தகுந்தாற் போன்று பராமரிப்பு இலக்குகளை மறு கவனத்திற்கு கொண்டு வருவதில் துணை செய்யும். இது, ஒரு நபர் பிறரோடு தொடர்பு கொள்ள முடியாமல் அல்லது முடிவுகள் எடுக்க முடியாமல் போகும் தருணத்தில், எதிர்கால மருத்துவ சிகிச்சையில் அவரின் தனிப்பட்ட விருப்பங்கள் மதிப்பளிக்க படுவதை உறுதி செய்யும்.

முன்கூட்டிய பராமரிப்பு திட்டமிடல், நாள்பட்ட மற்றும் இறுதிக்கட்ட சிறுநீரக நோய் கொண்ட மக்களிடையே இதய இயக்கம் அளவுகளான இதய-நுரையீரல் இயக்க மீட்பு மற்றும் டையாலிஸிஸிலிருந்து விலகி கொள்ளுவது போன்றவை தொடர்பான ஆரோக்கிய விளைவுகளை மேம்படுத்துமா என்பதை நாங்கள் அறிய விரும்பினோம். கூடுதலாக, வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில், நோயாளியின் ஆசைகள் பின்பற்ற பட்டதா என்பதையும் நாங்கள் அறிய விரும்பினோம்.

ஆய்வு பண்புகள்

ஜூன் 2016 வரையான இலக்கியத்தை நாங்கள் தேடி, 337 நோயாளிகளை சம்மந்தப்படுத்தி, நோயாளி-இலக்கான முன்கூட்டிய பராமரிப்பு திட்டமிடல் மற்றும் ஒப்பிணையானவர் ஆலோசனையை ஆராய்ந்த ஆய்வுகளை (மூன்று அறிக்கைகள்) கண்டோம்.

முக்கிய முடிவுகள்

இதய இயக்கல், மருத்துவமனையில் மரணம் அல்லது டையாலிஸிஸிலிருந்து விலகல் என ஆயுளை -நீட்டிக்கும் சிகிச்சைகள் தொடர்பான பயன்களை குறித்த எங்களின் கேள்விகளை இரண்டு ஆய்வுகளும் கவனத்தில் கொண்டு வரவில்லை. இறுதிக்கட்ட சிறு நீரக நோயாளிகளுக்கு முன்கூட்டிய பராமரிப்பு திட்டமிடல் ஆரோக்கிய விளைவுகளை மேம்படுத்துமா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஹீமோடையாலிஸிஸ் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு, நோயாளி-இலக்கான முன்கூட்டிய பராமரிப்பு திட்டமிடலின் பயனை அறிவிக்க அதிகமான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information