முதுகுத்தண்டு டிஸ்க்குகள் பாதிப்பதினால் ஏற்படும் கால் மற்றும் முதுகு வலிக்கு அறுவை சிகிச்சை

பின்புலம்

முதுகெலும்புகள் இடையே உள்ள முதுகுத்தண்டு டிஸ்க்குகள் சேதம் அடையும்போது (நெகிழ்தல் - herniated ), டிஸ்க்களுக்கு உள்ளே உள்ள மென்மையான கூழ் (gel ) டிஸ்க்குகளை வெளியே அதன்சுவற்றின் வழியே தள்ளுகிறது மற்றும் நரம்பு மற்றும் முதுகு தண்டை அழுத்துகிறது, இதனால் கால்களில் மற்றும் முதுகில் எரிகின்ற வலி ஏற்படுகிறது. இது கீழ் முதுகில் நடக்கும் போது கீழ்முதுகு டிஸ்க் நெகிழ்தல் என்று கூறப்படுகிறது.

திறனாய்வு கேள்வி

இந்த நிலைக்கு முக்கிய சிகிச்சையாக கருதப்படுவது கீழ்முதுகு டிஸ்க்அகற்றல் (discectomy). அது நரம்புகளை அழுத்தும் டிஸ்க் பகுதியை அகற்றல் ஆகும். இந்த அறுவை சிகிச்சையில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. முதல் வகை வழக்கமான நுண்ணிய-டிஸ்க்அகற்றல் (microdiscectomy- MD) இது நுண்ணோக்கி உருப்பெருக்கம் அல்லது இரு கண் பூதக்கண்ணாடி (loupe) உதவியுடன் நிகழ்த்த முடியும் அல்லது திறந்த டிஸ்க்அகற்றல் (open discectomy OD) என்பது அறுவை சிகிச்சை நிபுணர்கள் நுண்ணோக்கி அல்லது இரு கண் பூதக்கண்ணாடியை (loupe) பயன்படுத்த மாட்டார்கள். எனினும் அனைத்து அறுவை சிகிச்சை வழிமுறைகளும் ஒரே மாதிரியானதுதான். அறுவை சிகிச்சையின் இரண்டாவது வகை குறைவான துளையிடும் டிஸ்க்அகற்றல் (minimal invasive discectomy (MID) முறை. MID அறுவை சிகிச்சையில் ஒரு சிறிய கீறல் மற்றும் குறைந்த சேதம் மட்டும் அதை சுற்றியுள்ள திசுகளில் ஏற்படும். ஒரு வகை அறுவை சிகிச்சையை காட்டிலும் மற்றொரு முறை கால் வலி, முதுகு வலி, இயக்கம் அல்லது உணர்வின்மை பிரச்சனைகள் மற்றும் இயலாமை உள்ளிட்டவையை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதா என்று அறிய நாங்கள் ஆதாரங்களை திறனாய்வு செய்தோம்.

ஆய்வுகளின் பண்புகள்

நாங்கள் 12 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்ற 22 முதல் 325 பங்கேற்பாளர்களை கொண்ட ஆய்வுகளை அதாவது ,மொத்தம் 1172 பங்கேற்பாளர்களை கொண்ட நவம்பர் 2013 வரையிலான 11 ஆய்வுகள் கண்டறிந்தோம்.. அனைவரும் அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சையை முயற்சி செய்தனர், அனைவருக்கும் முதுகு வலியை விட கடுமையான கால் வலி இருந்தது. அறுவை சிகிச்சைக்கு பிறகு பின் தொடர் கண்காணித்தல் காலம் 5 நாட்கள் முதல் 56 மாதங்கள் ஆகும்.

முக்கிய முடிவுகள்

MD/OD செய்த மக்களுக்கு கால் வலி மற்றும் முதுகு வலி குறைவாக இருந்தது, ஆனால் அந்த வேறுபாடு சிறிதளவே இருந்தது. அவர்களுக்கு இரண்டாவது அறுவை சிகிச்சை குறைவனாதகவே தேவைப்பட்டது, ஏனெனில் முதல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அமையவில்லை. அவர்கள் வாழ்க்கை தரத்தில் உடல் இயக்கங்களில் சற்று மேம்பட்டதாக உணர்ந்தார்கள், ஆனால் அந்த வேறுபாடுகள் மிகச் சிறிய அளவே இருந்தன. மருத்துவ சிக்கல்கள் அடிப்படையில் இரண்டு சிகிச்சைகளும் ஒன்று போல் இருந்தன, எனினும் MD/OD செய்து கொள்ளும் மக்களுக்கு காயத்தில் தொற்று வருவதற்கு அதிக வாய்புகள் உள்ளன.

சான்றுகளின் தரம்

ஆதாரங்களின் தரம், பல ஆய்வுகள் குறைந்த எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களைக் கொண்டு நடத்தப்பட்டது மற்றும் ஒருதலை பட்சமாகவும் இருந்ததால், ஒட்டுமொத்தமாக கால் மற்றும் கிழ் முதுகு வலிக்கான ஆதாரங்களின் தரம் குறைவாக உள்ளது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: பியூலா செபகனி, பா.ஜெயலஷ்மி மற்றும் சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information