சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் (cystic fibrosis) கைக்குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகளுக்கு நிலுவையவடிப்பு

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

திறனாய்வு கேள்வி

நாங்கள் வெவ்வேறு நிலுவையவடிப்புகள் எவ்வாறு, சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் (cystic fibrosis) உடைய கைக்குழந்தைகள் மற்றும் ஆறு வயதிற்கு உட்பட்ட இளம் குழந்தைகளுக்கு இரையாக உணவுக்குழாய் எதுக்குதலின் (gastroesophageal reflux) பாதிக்கிறது என்பது பற்றிய ஆதாரங்களை திறனாய்வு செய்தோம். நாங்கள் நிலையான நிலுவையவடிப்பினை (postural drainage) (மிகுதியானது (30° முதல் 45° வரை தலை கிழே சாய்த்து) மற்றும் குறைவானது (15° முதல் 20° வரை தலை கிழே சாய்த்து) மாற்றம் செய்யப்பட்ட நிலுவையவடிப்புடன் (மிகுதியாக (30° தலை மேலே சாய்த்து) அல்லது குறைவானது (15° முதல் 20° வரை தலை மேலே சாய்த்து) ஒப்பிட்டோம்.

பின்புலம்

சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் (Cystic fibrosis) பல உறுப்புகளை பாதிக்கும் கோளாறு எனினும் நுரையீரல் நோய், இறப்பு மற்றும் உடல்நல குறைவுக்கு பொதுவான காரணமாகும். நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த மார்பு இயன்முறை பரிந்துரைக்கபடுகிறது. ஒரு வகையான மார்பு இயன்முறை சிக்கிச்சையான நிலுவையவடிப்பு (postural drainage), சிஸ்டிக் பிப்ரோசிஸ் (Cystic fibrosis) உடைய குழந்தைகளுக்கு சிகிச்சையாக பயன்படுத்தபடுகிறது இரண்டு வெவ்வேறு நுட்பங்கள் உள்ளன: நிலையான நிலுவையவடிப்பு முறை (இதில் குறைந்தபட்சமாக 15° - 20° மற்றும் அதிகமாக 30° தலை கிழே சாய்த்து) மற்றும் மாற்ற நிலுவையவடிப்பு ( இதில் குறைந்தபட்சமாக 15°- 20° மற்றும் அதிகமாக 30° தலை மேலே சாய்த்து). எனினும், இரப்பை உணவுக்குழாய் எதுக்குதலின் ஒரு ஆபத்தாக இருப்பது (வயிற்றின் உள்ளடக்கங்களை திரும்ப உணவுக்குழாய்க்கு செல்லுதல் (தொண்டை பகுதி) இந்த நுட்பம் மூலம் தொடர்புடையதாகும். சிஸ்டிக் பிப்ரோசிஸ் உள்ள குழந்தைகள் ஆரோக்கியமான குழந்தைகளை விட இரப்பை உணவுக்குழாய் எதுக்குதலின் அதிகமாக பதிக்கபடுகின்றனர் என்பதால், இந்த இரண்டு நுட்பங்களில் சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் உடையவர்களுக்கு சிறந்த மற்றும் மிகவும் பாதுகாப்பனதை கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமானது.

தேடல் தேதி

இந்த ஆதாரம் ஜனவரி 2015 நிலவரப்படியானவை.

ஆய்வுகளின் பண்புகள்

இந்த திறனாய்வில் இரண்டு ஆய்வுகள் உள்ளன இதில் 6 வயதிற்கு உட்பட்ட சிஸ்டிக் பிப்ரோசிஸ் உடைய குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு ஆய்வில் 20° தலை கிழே சாய்த்து மற்றும் தலை மேலே சாய்த்து மற்றும் இன்னொரு ஆய்வில் நிலையான முன்பக்க வடிகாலை (30° தலை கிழே சாய்த்து ) ஒப்பிடும்போது மாற்றம் முன்பக்க வடிகாலை (30° தலை மேலே சாய்த்து) ஒப்பிடுதல் பயன்படுத்தபட்டது. குழந்தைகள் சமவாய்ப்பிட்டு ஒரு சிகிச்சைக்கு அல்லது மற்ற சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஒரு ஆய்வு 24 மணி நேர காலத்தில், இரண்டாவது ஆய்வு இரண்டு நாட்கள் மேற்கொள்ளப்பட்டது, ஆனால் ஐந்து ஆண்டு காலம் தொடர் கண்காணிக்கப்பட்டனர். பங்கேற்பாளர்களின் வயது மூன்று வாரம் முதல் 34 மாதம் வரை பரவி இருந்தது.

முக்கிய முடிவுகள்

ஒரு ஆய்வில் 20° தலை கிழே சாய்த்து மற்றும் தலை மேலே சாய்த்தும். இந்த இரண்டு முன்பக்க வடிகால் திட்டங்கள் இடையே வேற்றுமை தெரியவில்லை இரப்பை உணவுக்குழாய் எதுக்குதலின்.அதேசமயம் மற்றொரு ஆய்வில் சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் உடைய குழந்தைகளுக்கு நிலையான முன்பக்க வடிகாலை ஒப்பிடும்போது மாற்றம் முன்பக்க வடிகாலில் குறைவான சுவாச சிக்கல்கள் ஏற்படுவது கண்டறியப்பட்டது. பங்கேற்பாளர்களின் வயது, சாய்வு கோணம், விளைவுபயன் பற்றிய தகவல், சிகிச்சை அமர்வு எண்ணிக்கை மற்றும் ஆய்வு கால அளவின் எண்ணிக்கை இரண்டு ஆய்வுகள் இடையே வேறுபட்டன. இந்த திறனாய்வின் மூலம் அறியப்பட்ட சான்றுகள் பலவீனமாக உள்ளன; எனினும், 30° தலை கிழே சாய்க்கும் நிலையை விட 30° தலை மேலே சாய்தல் மூலம் குறைவான எதிர்த்தாக்கம் அத்தியாயங்களில் மற்றும் சுவாச சிக்கல்கள் ஏற்படுவது தெரிகிறது. ஒரு ஆய்வில் இரண்டு நுட்பங்களுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கவில்லை என்றாலும் பெரும்பாலான எதிர்த்தாக்கம் அத்தியாயங்களில் வயிறு உள்ளடக்கங்கள் மேல் உணவுக்குழாயை அடைவதினால் மூச்சுத் திணறல் ஏற்படுவது சாத்தியமானது. இயன்முறை மருத்துவர்கள் தங்களுக்கு விருப்பமான நுட்பத்தை கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.

சான்றுகளின் தரம்

இரண்டு ஆய்வுகளும் நன்கு செய்யபட்டன மற்றும் எந்த காரணிகளும் எதிர்மறை வழியில் முடிவு தரும் என்று நாங்கள் நினைக்கவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: ஜெயலக்ஷ்மி மற்றும் சி.இ. பி.என்.அர் குழு