உயர் இரத்த அழுத்தம் உள்ள நபர்களின் உயர் யூரிக் அமிலத்தின் அளவை குணப்படுத்த மருந்து சிகிச்சை

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

பின்புலம்

யூரிக் அமிலம் என்பது உடல் திசுக்களின் பிறிவால் இயற்கையாகவே உற்பத்தியாகக்கூடிய கடைசி பொருள் மற்றும் ஒரு நபரின் உணவு, மிக முக்கியமாக புரதம். யூரிக் அமிலம் பொதுவாக சிறுநீரகம் மூலமாக இரத்தத்திலிருந்து அகற்றப் படுகிறது மற்றும் உடலில் இருந்து சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகிறது. எனினும், அதிக யூரிக் அமிலம் உருவானாலோ அல்லது எப்போதும் போல இரத்தத்தின் மூலம் சிறுநீரகத்தால் வெளியேற்ற முடியாமல் போனாலோ இரத்த ஓட்டத்தில் உள்ள யூரிக் அமில அளவுகள் அதிகமாகிறது (ஹைபர்குரிசிமியா). ஹைபர்குரிசிமியா மற்றும் உயர் இரத்த அழுத்தம் இடையே உள்ள இணைப்பு (உலகளாவிய ஒரு பெரிய சுகாதார விஷயம்) 19 ஆம் நூற்றாண்டு முதலே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இன்று, இது ஒரு முக்கியமான தொடர்பு என்பதற்கு அதிகமான சான்றுகள் உள்ளன. இந்த ஆய்வின் நோக்கமானது இரத்தத்தில் உள்ள யூரிக் அமில அளவு குறைவது குறைந்த இரத்த அழுத்தத்தை ஏற்படுத்த முடியுமா என்பதை மதிப்பீடு செய்வதாகும். அத்தகைய அணுகுமுறை ஒரு புதிய குறிக்கோள் மற்றும் / அல்லது உயர் இரத்த அழுத்தம் கொண்ட நபர்களுக்கான சிகிச்சை முறையை பிரதிநிதித்துவப்படுத்தலாம்.

ஆய்வு பண்புகள்

இந்த முந்தைய மறுஆய்வின் மேம்படுத்தலில், நாங்கள் 349 குறிப்புகளின் சுருக்கங்களைப் பரிசோதித்தோம் மற்றும் அதில் 21 குறிப்புகளை மதிப்பீடு செய்ய தேர்வு செய்தோம். இதில் மூன்று ஆராய்ச்சிகள் மட்டுமே சேர்ப்பதற்கு பொருத்தமானவையாக இருந்தன, அவற்றில் இரண்டு இந்த தலைப்பில் முந்தைய மறுஆய்வுகளில் அடையாளம் காணப்படவில்லை. இந்த மதிப்பீட்டில் உள்ள மறுஆய்வுகள் அமெரிக்காவிலிருந்து வந்தவை மற்றும் இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்களின் மதிப்பீடு. இந்த ஆய்வுகளின் நோக்கமானாது, மருந்து சிகிச்சையை யூரிக் அமிலத்தை குறைப்பதற்காக உயர் இரத்த அழுத்தம் உள்ள நபர்களிடத்தில் மருந்தற்ற குளிகை சிகிச்சையையோடு ஒப்பிடுதல்

ஆராய்ச்சி என்ன கூறுகிறது:

யூரிக் அமிலத்தை குறைப்பதற்கான மருந்து சிகிச்சை முறையில் இரத்த அழுத்தத்தில் போதுமான அளவு குறைவு ஏற்படவில்லை இரத்தத்தில் அதிக அளவு யூரிக் அமிலம் உள்ள நபர்களிடம் என்று கண்டறிந்துள்ளோம். அதே போல் மருந்தற்ற குளிகை சிகிச்சையை உயர் இரத்த அழுத்ததோடு ஒப்பிடுகையிலும் மருந்து சிகிச்சை யூரிக் அமிலத்தின் இரத்த அளவைக் குறைக்க மருந்தற்ற குளிகை சிகிச்சைக்கும் மேலாக இருந்தது . மருந்து சிகிச்சையில் பக்க விளைவுகள் காரணமாக வெளியேறுதல் அதிகரிக்கப்படவில்லை; எனினும், ஒரு ஆய்வில், ஒரு நோயாளி ஒரு கடுமையான வெடிப்பு எதிர்வினை காரணமாக விலகினார்.

இதனால், இரத்தத்தில் உள்ள யூரிக் அமில அளவுகளை குறைக்கும் மருந்துகளின் பயன்பாடு உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்களில் இரத்த அழுத்தம் குறைவதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை. இந்த கேள்விக்கு மேலும் பல ஆராய்ச்சிகள் தேவை மூன்று ஆய்வுகள் மட்டுமே சேர்ப்பதற்க்கு பொருத்தமானவை என்பதால், எதிர்கால ஆய்வுகள் இந்த முடிவுகளை மாற்றாது என்பதை நாம் உறுதியாக கூற முடியாது.

ஆதாரங்களின் தரம்

மொத்தத்தில், உயர் தரத்திலான யூரிக் அமிலத்தை குணப்படுத்துவதற்கான மருந்து சிகிச்சை இரத்த அழுத்தத்தை குறைக்கிறதா என்பதை நிரூபிக்க தவறிய குறைந்த தர ஆதாரங்கள் இருந்தன. இந்த மதிப்பீட்டில் சேர்க்கப்பட்ட ஆய்வுகள் இந்த முடிவுக்கான ஆய்வுகள் முழுவதும் ஒத்தவை அல்ல. கூடுதலாக, யூரிக் அமிலம் குறைக்கும் மருந்து சிகிச்சை யூரிக் அமிலத்தை குறைக்கும் என்பதற்கான உயர் தர ஆதாரங்களைக் கண்டோம். இறுதியாக, பக்க விளைவுகளால் போதை மருந்து சிகிச்சை திரும்பப்பெறப்பட்டதா என்பதை நிரூபிக்க தவறியதற்கான மிக குறைந்த தர சான்றுகள் இருந்தன. இதற்கான முக்கிய காரணங்கள், ஆய்வு வடிவமைப்புடன் உள்ளடங்கியது, தரவு இல்லாததால், ஆய்வுகள் முழுவதும் ஒத்ததாக இல்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

CD008652.pub3