மாதவிடாய் வலிக்கு அக்குபங்சர்

திறனாய்வு கேள்வி

முதன்மை டிஸ்மெனொரியா கொண்ட இனவிருத்தி வயதிலுள்ள எல்லா பெண்களிலும் மாதவிடாய் வலி மற்றும் அறிகுறிகளைக் குறைப்பதில் கட்டுப்பாட்டுக்கு எதிராக அக்குபங்சர் மற்றும் அக்குப்ரஷரின் விளைவை பற்றிய ஆதாரத்தை காக்ரேன் ஆராய்ச்சியாளர்கள் திறனாய்வு செய்தனர். எந்த அடிப்படை காரணமும் இல்லாமல் ஏற்படும் வலி, முதன்மை டிஸ்மெனொரியா என்று பொருள் படும்.

பின்புலம்

மாதவிடாய் வலி என்றும் அழைக்கப்படும் டிஸ்மெனொரியா, இளவயது பெண்களால் பொதுவாக அனுபவிக்கப்படும். கீழ் முதுகு அல்லது முன் தொடை வரைக்கும் பரவக் கூடிய கீழ் வயிற்றுப் பகுதியில் தசைப் பிடிப்பு, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி, அயர்ச்சி, பதட்டம், மற்றும் தலைச்சுற்றல் ஆகியவை அறிகுறிகளில் உள்ளடங்கும். பாரம்பரிய சிகிச்சைகளின் பயன்பாடு அதிகமாக உள்ளது, ஆனால், 20% முதல் 25% வரைக்குமான பெண்கள் பற்றாக்குறையான வலி நிவாரணத்தையே கொண்டுள்ளனர். ஆதலால், மாதவிடாய் வலியின் அறிகுறிகளை திறம்பட நிர்வகிக்க பிற அணுகுமுறைகள் நமக்கு தேவைப்படுகின்றன. மாதவிடாய் வலியை குறைப்பதில் அக்குபங்சர் (ஊசிகளை பயன்படுத்தி உடலில் புள்ளிகளை தூண்டுதல்) மற்றும் அக்குப்ரஷர் (அழுத்தத்தை பயன்படுத்தி உடலில் புள்ளிகளை தூண்டுதல்) அத்தகைய வலியைக் குறைப்பதில் எவ்வாறு திறன் வாய்ந்ததாக இருக்கும் என்று நமக்கு தெரியாவிட்டாலும், அவை மாதவிடாய் வலிக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகின்றன.

ஆய்வு பண்புகள்

இனவிருத்தி வயதிலுள்ள மாதவிடாய் வலி கொண்ட மொத்தம் 4640 பெண்களில், ஒரு கட்டுப்பாட்டுடன் (போலி சிகிச்சை, மருந்து, சீன மூலிகைகள், சிகிச்சையின்மை அல்லது வழக்கமான பராமரிப்பு) ஒப்பிடப்பட்ட அக்குபங்சர் மற்றும் அக்குப்ரஷரின் 42 சோதனைகளை நாங்கள் இணைத்துள்ளோம். இருபத்தி-இரண்டு ஆய்வுகள் சீனாவில் நடத்தப்பட்டன. எட்டு ஆய்வுகள் ஈரானிலும், நான்கு ஆய்வுகள் தைவானிலும், இரண்டு ஆய்வுகள் கொரியாவிலும், மற்றும் ஒவ்வொரு ஒரு ஆய்வும் ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஹாங்காங், தாய்லாந்து, துருக்கி, மற்றும் யுஎஸ்ஏ-விலும் நடத்தப்பட்டன. இந்த ஆதாரம் செப்டம்பர் 2015 வரைக்கும் நிலவரப்படியனது.

முக்கிய முடிவுகள்

முதன்மை டிஸ்மெனொரியாவிற்கு சிகிச்சையளிப்பதில் அக்குபங்சர் அல்லது அக்குப்ரஷர் திறன் மிக்கதாக இருக்குமா அல்லது இல்லையா என்பதை விளக்கிக் காட்ட போதுமான ஆதாரம் இல்லை, மற்றும் பெரும்பாலான ஒப்பீடுகளுக்கு, பாதகமான நிகழ்வுகள் மேல் எந்த தகவலும் இல்லை.

சான்றின் தரம்

அனைத்து ஒப்பீடுகளுக்கும், ஆதாரத்தின் தரம் குறைந்தது அல்லது மிகவும் குறைந்ததாக இருந்தது. ஒரு தலை சார்பு அபாயம், மோசமான அறிக்கையிடல், நிலையற்ற தன்மை மற்றும் வெளியிட்டாளர்சார்பு அபாயம் ஆகியவை முக்கியமான வரையறைகளாகும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information