பார்க்கின்சன் நோய்க்கான ஓடுபொறி பயிற்சிகள்


கேள்வி:ஓடுபொறி பயிற்சி மற்றும் உடல் எடைதாங்கியுடன் தனியாகவோ அல்லது இணைத்தோ பயிற்சி கொடுக்கப்பட்டால் அது எந்த சிகிச்சையும எடுத்துக்கொள்ளாதவர்கள் அல்லது இதர நடை பயிற்சி, வெற்று சிகிச்சை (placebo) போன்றவற்றை மேற்கொண்டவர்களோடு ஒப்பிடுகையில் நடக்கும் திறன் மேம்பட்டுள்ளதா என மதிப்பீடு செய்வது.

பின்னணி: மெதுவாக நடப்பது பார்கின்சன் நோய் உள்ளவர்களுக்கு ஒரு பொதுவான பிரச்சனை. இது லேசான முதல் மிதமான அளவு பார்கின்ஸைன்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டோர்க்கு அன்றாட காரியங்கள் செயும் திறன் மற்றும் வாழ்க்கை தரத்தை பாதிக்கிறது. ஓடுபொறி பயிற்சி நடை புனர்வாழ்வுக்கு உதவ இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும், பார்கின்சன் நோய் உள்ளவர்களுக்கு ஓடுபொறி பயிற்சி எந்தளவு நடை கூறளவுகளை மேம்படுத்தும் என்று இன்னும் தெளிவாக தெரியவில்லை.

ஆய்வு பண்புகள்:நாங்கள் செப்டம்பர் 2014 வரை 633 பங்கேற்பாளர்களை கொண்ட, 18 பொருத்தமான ஆய்வுகளை அடையாளம் கண்டோம்.

முக்கிய முடிவுகள் மற்றும் சான்றுகள் தரம்: ஓடுபொறி பயிற்சி நடை வேகம், மற்றும் ஸ்டர்டு நீளம் போன்றவை மேம்பட்டது; ஆனால் நடைக்கும் தூரம் மற்றும் காடன்சில் (cadance) எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆய்வு பங்கேற்பாளர்கள் ஓடுபொறி பயிற்சியை ஏற்கும் தன்மை நன்றாக இருந்தது மற்றும் பாதகமான நிகழ்வுகள் அரிதாக இருந்தது. இது போன்ற சாதனங்கள் பயனுள்ளதாக இருக்க முடியும் மற்றும் வழக்கமான மறுவாழ்வு சிகிச்சையுடன் பயன்படுத்தப்படுத்தலாம் என்று தெரிகிறது. இருப்பினும், எவ்வளவு முறை இதனை பயன்படுத்தவேண்டும் மற்றும் எவ்வளவு காலம் இதன் பயன்பாடு நீடிக்கும் என்பது பற்றிய புறிதல் இன்னும் சரியாக தெரியவில்லை.

முதன்மை விளைவுகளை பற்றிய ஆதாரங்கள் தரம் குறைந்தது முதல் மிதமானது வரை இருந்தது. தீங்கு விளைவிக்கும் நிகழ்வுகள் மற்றும் பயிற்சியை கைவிட்டுவிடுவ்து போன்றவை ஓடுபொறி பயிற்சி பெறும் மக்களிடத்து அடிக்கடி ஏற்படவில்லை. மேலும் நாங்கள் நடை கூறளவுகள் பற்றி மட்டும் ஆராயந்தோம் மற்றும் நடவடிக்கைகள் அல்லது வாழ்க்கை தரத்தை மேம்பாடுகளை பற்றி ஆராயவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர். குழு

Tools
Information