பெருவிரல் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள்

பெருவிரல் கீல்வாதத்திற்குப் பலவித சிகிச்சைகளின் திறன்கள் குறித்து ஆராய்ச்சியின் மூலம் நாங்கள் அறிந்து கொண்டதை இந்த காக்ரேன் திறனாய்வு சுருக்கம் மூலம் வழங்கு கிறோம்.

இந்த ஆய்வு பெருவிரல் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூறுவது யாதெனில்:

வழக்கமான இயன்முறை சிகிச்சையுடன் (தசை இளக்கம் (stretching), மற்றும் வேறு பல உடற்பயிற்சிகள், செவியுணரா ஒலி சிகிச்சை மற்றும் மின் தூண்டுதல்),இவற்றோடு புறவிசையியக்க மூட்டசைவு (mobilisation) மற்றும் நடை உடல்பயிற்சியுடன் வழக்கமான இயன்முறை சிகிச்சைகள்.

- வலி குறையக் கூடும்.

-செயல்பாட்டு திறன் அளவிடப்படவில்லை.

-தீங்கு மற்றும் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை.

கீல்வாதம் என்றால் என்ன,அதற்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படும்?

கீல்வாதம் என்பது மூட்டுகளைத் தாக்கும் நோயாகும். உங்கள் மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது வளர்ந்து, இந்த நிலைமையைச் பாதிப்பை சரி செய்ய முயற்சிக்கும். ஆனால், எலும்பு வழக்கத்திற்கு மாறாக வளர்ந்து இந்நிலையைச் சரி செய்வதற்குப் பதிலாக, மோசமடையச் செய்கிறது. உதாரணமாக, எலும்பானது உருவிழந்து, மூட்டுவலியையும், ஸ்திரமற்ற மூட்டையும் உண்டாக்கும்.

கீல்வாதம் குருத்தெலும்பின் தேய்மானத்தினால் ஏற்படுகிறது என்றே மருத்துவர்கள் கருதினார்கள். ஆனால் இப்பொழுதோ, அது ஒரு முழுமையான மூட்டு நோய் என்று கருதப்படுகிறது. குறிப்பிட்ட பாத அமைப்பு, அடிபடுதல், குடும்பத்தில் இதனால் பதிக்கப்பட்ட வர்கள் வரலாறு, மூட்டு நோய் மற்றும் நடை குறைபாடுகள் போன்ற கூறுகள் உங்ககளுக்கு பெருவிரல் கீல் வாதம் வரும் வாய்ப்பை அதிகரிக்கும்.

கீல்வாதம் ஆண்களையும் பெண்களையும் சமமாக பாதிக்கும் மிக பரவலான வாத வகைகளில் ஒன்றாகும். மக்கள் முதிர்வடையும்போது ஏற்படும் இயலாமைக்குக் கீல்வாதம் முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.

தசை வலிமை, உடல் திறன் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்ற அல்லது சீராக வைக்கிற எந்த ஒரு செயற்பாடாகவும் உடற்பயிற்சி உள்ளிட்ட இயன்முறை சிகிச்சை இருக்கலாம். உடல் எடையைக் குறைக்கவும், தசை வலிமையை அதிகரிக்கவும், மற்றும் கீல்வாத அறிகுறிகளிலிருந்து விடுபடவும் என பல்வேறு காரணங்களுக்காகவும் மக்கள் உடற்பயிற்சி செய்கிறார்கள்.

பெருவிரல் கீழ்வாதம் உள்ளவர்களுக்கு என்ன நடக்கும் என்பதற்கான சிறந்த கணிப்பு:

வலி (அதிக மதிப்பெண் என்றால் மோசமான வலி என்று அர்த்தம்)

- வழக்கமான இயன்முறை சிகிச்சையுடன் கூடுதல் உடற்பயிற்சி பெற்றவர்களை வழக்கமான இயன்முறை சிகிச்சை மட்டும் பெற்றவர்களுடன் ஒப்பிடுகையில் அவர்களின் வலியை நான்கு வாரங்களுக்கு பின் 0 முதல் 10 வரையிலான அளவு கோலில் 3.8 புள்ளிகள் என்று மதிப்பிட்டனர் (38 % முழுமையான முன்னேற்றம்).

- வழக்கமான இயன்முறை சிகிச்சையுடன் கூடுதல் உடற்பயிற்சி பெற்றவர்கள் அவர்களின் வலியை நான்கு வாரங்களுக்கு பின் 0 முதல் 10 வரையிலான அளவு கோலில் 0.4 என்று மதிப்பிட்டனர்.

- வழக்கமான இயன்முறை சிகிச்சை மட்டும் பெற்றவர்கள் அவர்கள் வலியை நான்கு வாரங்களுக்கு பின் 0 முதல் 10 வரையிலான அளவு கோலில் 4.2 என்று மதிப்பிட்டனர்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி. இ. பி.என்.அர். குழு

Tools
Information