தீவிர வயிற்று போக்கிற்கு உணவு சார்ந்த வாய்வழி அளிக்கப்படும் நீரேற்றல் கரைசல்கள் (ORS)

பாலிமர் -அடிப்படையிலான வாய்வழி நீரேற்றல் கரைசல்கள் (ORS) என்றால் என்ன? அவை எவ்வாறு உதவக்கூடும்.

கடுமையான வயிற்றுப் போக்கு வளரும் நாடுகளில் இறப்பு மற்றும் சுகவீனத்திற்கு ஒரு பொதுவான காரணமாக உள்ளது. வாய்வழி நீரேற்றல் கரைசல்கள் (ORS) உலகெங்கிலும் வயிற்றுப்போக்கு தொடர்பான இறப்பு எண்ணிக்கையைக் குறைப்பதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஆரம்பகால வாய்வழி நீரேற்றல் கரைசல்கள் (ORS) குளுகோஸ் (இனிகம் ) சார்ந்தவை. மற்றும் ஊடமைச் செறிவு (osmolarity) 310 mOsm /L வரை அல்லது அதைவிட அதிகமானதாகவும் இருந்தது. பின்னர், திறனை அதிகப் படுத்தும் நோக்கில் குறைந்த ஊடமைச் செறிவு (osmolarity) கொண்ட குளுகோஸ் (இனிகம்) சார்ந்த வாய்வழி நீரேற்றல் கரைசல்கள் (ORS) அறிமுகப்படுத்தப்பட்டன. அவை வயிற்றுப் போக்கின் அளவு மற்றும் கால அளவைக் குறைப்பதில் சிறந்ததாக கருதப்பட்டன. பெரும்பாலான ORS கரைசல்கள் சர்க்கரை-உப்பு கரைசலாக உள்ளது.ஆனால் நாளடைவில் முழு அரிசி, கோதுமை,சோளம், மற்றும் மக்காச்சோளம் ஆகியவற்றை சேர்த்து விதவிதமான கரைசல்களை உபயோகபடுத்தினார்கள். அதனுடைய நோக்கம் குடலில் குளுகோஸை மெதுவாக விடுத்து மற்றும் கரைசலில் உள்ள தண்ணீர் மற்றும் உப்பை உறிஞ்சுதலை அதிகப்படுத்துதலுமாகும்.

இந்த ஆய்வு 2009 –ல் வெளியிடப்பட்ட ஒரு காக்ரேன் திறனாய்வை மேம்படுத்தி பலபடி சார்ந்த ORS(அரிசி சார்ந்த மற்றும் அரிசி சாராத) ஐ, குளுகோஸ் சார்ந்த ORS உடன் ஒப்பிடுகையின் பயன் குறித்து கிடைக்கின்ற சான்றுகளை மதிப்பீடு செய்கிறது.

ஆராய்ச்சி என்ன கூறுகிறது:

5 செப்டம்பர் 2016 வரைகிடைத்த ஆதாரங்களை காக்ரேன் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தார்கள். 4284 பங்கேற்பாளர்களைக் கொண்ட மொத்தம் 35 ஆராய்ச்சிகள் திறனாய்வில் சேர்ப்பதற்கான அடிப்படை தகுதியைப் பெற்றிருந்தன. 27 ஆராய்ச்சிகள் குழந்தைகளிலும், ஐந்து ஆராய்ச்சிகள் பெரியவர்களிலும், இரண்டு ஆராய்ச்சிகள் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளிலுமாக மேற்கொள்ளப்பட்டவை. பெரும்பாலான ஆராய்ச்சிகள் பலபடி(polymer) சார்ந்த வாய்வழி நீரேற்றல் கரைசல்களை (ORS)க் குறிப்பிட்ட அடர்த்தியுள்ள, தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த சூத்திரத்தைக்காட்டிலும் (≤ 270 mOsm/L) சிறிது உவர்ப்பானதான, சர்க்கரை - உப்பு கரைசலுடன் (ORS ≥ 310)ஒப்பிட்டுள்ளன. ஆய்வுகளின் செயல் முறையின் தரம் மாறுபட்டு இருந்தது.

சக்கரை-உப்பு நீரேற்றல் கரைசல்களுடன்(ORS) ≤ 270 mOsm/L மற்றும் பலபடி(polymer) சார்ந்த வாய்வழி நீரேற்றல் கரைசல்களைக் (ORS)கொடுத்து செயப்பட்ட ஆய்வில், ஒன்று மற்றதைவிட மேலானது என்று காண்பிக்க போதுமான அளவு ஆதாரம் இல்லை . (குறைவுமுதல் மிக குறைவான தரம் கொண்ட தாரம்).

சக்கரை-உப்பு நீரேற்றல் கரைசல்களுடன்(ORS) ≤ 270 mOsm/L ஒப்பிடும்போது பலபடி(polymer) சார்ந்த வாய்வழி நீரேற்றல் கரைசல் தொகுப்பு (ORS group )எடுத்துகொண்டவர்களுக்கு வயிற்றுப் போக்கின் அளவு மற்றும் அதன் கால அளவு குறைவாக இருந்தது. சொட்டு மீள் நீரேற்றம் (ட்ரிப்ஸ்) தேவைபடுவோரின் எண்ணிக்கையில் இரு குழுக்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் காணப்படவில்லை. எதிர் விளைவு நிகழ்வுகள் ஒரே மாதிரியாக இருந்தன (குறைவு1முதல் மிக குறைவான தரம் கொண்ட ஆதாரம்).

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information