தோள்பட்டை வலிக்கான குத்தூசி மருத்துவம்.


தோள்பட்டை வலிக்கு குத்தூசி மருத்துவம் பயனளிக்குமா?
இந்த கேள்விக்கு விடையளிக்க, விஞ்ஞானிகள் 9 ஆய்வுகளை கண்டுபிடித்து பகுப்பாய்வு செய்தனர். தோள்பட்டை வலி கொண்டிருந்த 500 க்கும் மேற்பட்ட மக்களை இந்த ஆய்வுகள் சோதனை செய்தது. மக்கள் 20-30 நிமிடங்களுக்கு குத்தூசி மருத்துவமோ, ஒரு மருந்தற்ற குளிகை (போலி சிகிச்சை), நுன்னொலி, மென்மையான இயக்கம் அல்லது பயிற்சிகளையோ, வாரம் 2-3 தடவை, 3-6 வாரங்களுக்கு மேற்கொண்டனர். இந்த ஆய்வுகள் சிறிய அளவிலும் மற்றும், உயர்ந்த தரமில்லாமல் இருந்த போதிலும், இந்த காக்குரேன் ஆய்வுரை இன்றைக்கு எங்களிடம் உள்ள சிறந்த சான்றை வழங்குகிறது.

தோள்பட்டை வலி எதனால் ஏற்படுகிறது மற்றும் குத்தூசி மருத்துவம் எவ்வாறு உதவ முடியும் ?
தோள்பட்டை வலி பலதரப்பட்ட காரணிகளால் ஏற்படும்.
அது தோள் சுற்றுப்பட்டை நோய் , மூட்டு வாதம் அல்லது இறுகின மூட்டு உறை (உறைந்த தோள்) போன்றவற்றால் ஏற்படும். தோள்பட்டை வலி சில நேரங்களில் அதுவாகவே மறைந்து போகும் அல்லது 12 முதல் 18 மாதங்கள் வரை நீடிக்க கூடும். மருந்து மற்றும் மருந்தில்லா சிகிச்சைகள் வலி மற்றும்/அல்லது வீக்கத்தை தணிக்க பயன்படுத்தப்படுகிறது. குத்தூசி மருத்துவம் என்பது தோள்பட்டை வலிக்கு மேலும் மேலும் பயன்படுத்தப்படும் ஒரு மருந்தில்லா சிகிச்சை முறையாகும். குத்தூசி மருத்துவம் உடலில் ரசாயன கலவைகளை வெளியிடுவதன் மூலமோ, நரம்புகளில் வலி சமிஞ்சைகளை மட்டுப்படுத்தி வலியை குறைத்தோ அல்லது ஆற்றலை (குய் ) அனுமதிப்பதின்மூலமோ அல்லது ரத்தத்தை உடலில் தடையின்றி பாய்ச்சுவதன் மூலமோ செயல்படுகிறது என எண்ணப்படுகிறது. குத்தூசி மருத்துவம் செயல்படுமா அல்லது பாதுகாப்பானதா என்பது தெரியவில்லை.

குத்தூசி மருத்துவம் எவ்வாறு செயல்படுகிறது ?
குத்தூசி மருத்துவத்தினால் வலி மற்றும் செயல்பாட்டில் ஏற்படும் மேம்பாடுகள், 2 முதல் 4 வாரங்கள் ஒரு போலி சிகிச்சை பெற்றதின் விளைவுகளை ஒத்திருந்தின.

போலி சிகிச்சையை காட்டிலும் குத்தூசி மருத்துவமானது 4 வாரங்களுக்கு பிறகு தோள் பட்டையின் செயலாற்றலை மேம்படுத்தியது என ஒரு ஆய்வு காண்பித்தது. ஆயினும் 4 மாதங்களுக்கு பிறகு ஒரே அளவு முன்னேற்றம் தான் காணப்பட்டது ,0-100 வரையிலான அளவு கோலில் ,குத்தூசி மருத்துவம், முன்னேற்ற அளவில் 4 புள்ளிகள் வித்தியாசத்தை மட்டுமே காட்டியது.

வெறும் உடற் பயிற்சியைக் காட்டிலும் குத்தூசி மருத்துவத்துடன் கூடிய உடற்பயிற்சியானது, 5 மாதங்கள் வரை வலியை குறைக்கவும், தோள்பட்டையின் இயக்க வரம்பு மற்றும் செயல்பாட்டை செம்மைப்படுத்தவும் சிறந்தது என ஒரு சிறு ஆய்வு காண்பித்தது.


அது எவ்வளவு பாதுகாப்பானது?
பெரும்பாலான ஆய்வுகளில் பக்க விளைவுகள் அளவிடப்படவில்லை. குத்தூசி மருத்துவம் அல்லது போலி சிகிச்சையில், மயக்கம் , தலைவலி, தலைச்சுற்றல், வீக்கம் அல்லது கால் பலவீனம் போன்ற பக்க விளைவுகள் ஒரே அளவில் ஒத்திருந்தின என்று ஒரு ஆய்வு காட்டியது.அடிப்படை பொருள் என்ன?தோள்பட்டை வலியை குணப்படுத்துவதில் குத்தூசி மருத்துவம் செயல்படுகிறதா அல்லது தீங்களிக்கிறதா என்பதை சொல்ல போதுமான ஆதாரங்கள் இல்லை.

குத்தூசி மருத்துவம் , வலி மற்றும் செயல்பாட்டை குறுகிய கால கட்டத்திற்கு (2 முதல் 4 வாரங்கள்) முன்னேற்றமடைய செய்கிறது என்பதற்கு சிறிதளவு ஆதாரமுள்ளது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: இ.நவீன் குமார் சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information