தொடையில் உணர்வின்மை மற்றும் சில நேரங்களில் வலியை ஏற்படுத்தக்கூடிய மெரால்ஜியா பாராஸ்திடிக்காவிற்கான சிகிச்சை

மெரால்ஜியா பாராஸ்திடிக்கா என்பது தொடையின் பக்கவாட்டு சரும நரம்பு (லாட்டரல் க்யுடேனியஸ் நேர்வ்) சேதத்தால் வலி, உணர்வின்மை மற்றும் தொடையில் முன் மற்றும் வெளி பக்கத்தில் கூச்சமூட்டத்தை ஏற்படுத்தும் ஒரு பொதுவான மருத்துவ நிலையாகும். இதை, நோய் அறுதியிடு செய்வது எளிதானது. உயிருக்கு-ஆபத்தானதில்லை என்றாலும், இந்த பிரச்னையானது பாதிக்கப்பட்ட நபருக்கு அதிக சிரமத்தை ஏற்படுத்தும். பல சிகிச்சை தலையீடுகள் பொதுவான பயன்பாட்டில் உள்ளன, மற்றும் இலக்கிய ஆதாரங்களில் உள்ள அவற்றின் திறனை ஆய்வு செய்ய நாங்கள் விரும்பினோம். மூல திறனாய்வில் அல்லது 2010 மற்றும் 2012-ல் புதுப்பிக்கப்பட்ட தேடல்களில், எந்த சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளையும் (ஆர்சிடி'ஸ்) நாங்கள் காணவில்லை. கண்காணிப்பு ஆய்வுகளில், பிரச்னை தலத்தில் செலுத்தப்பட்ட கார்டிகாஸ்டிராய்ட் ஊசிகள், மற்றும் அறுவை சிகிச்சைகள் திறன் மிக்கதாக அறியப்பட்டன. எனினும், மெரால்ஜியா பாராஸ்திடிக்கா பெரும்பாலான நேரங்களில் தன்னிச்சையாக மேம்படுகிறது என்றும் ஒரு கண்காணிப்பு ஆய்வு காட்டியது. மெரால்ஜியா பாராஸ்திடிக்காவிற்கான சிகிச்சைகளுக்கு சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் (ஆர்சிடி'ஸ்) தேவை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்:தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information