மணிக்கட்டுக் கால்வாய் விடுவித்தலை தொடர்ந்து புனர்வாழ்வு

திறனாய்வு கேள்வி

மணிக்கட்டு குகை நோய் தொகுப்புக்கான அறுவை சிகிச்சைக்குப் பிறகு புனர்வாழ்வு தலையீடுகள் பயனுள்ளவையாகவும் பாதுகாப்பானதாகவும் உள்ளனவா?

பின்புலம்

மணிக்கட்டில் எலும்பு மற்றும் தசைநார் குகை வழியாக செல்லும் நரம்பு அழுத்தப்படுவதால் மணிக்கட்டு குகை நோய் தொகுப்பு உண்டாகிறது. இது கையில் வலி, உணர்வின்மை மற்றும் ஊசிவைத்து குத்துவது போன்ற உணர்வினை உண்டுபண்ணுகிறது. சிலவேளைகளில் இது முன்னங்கை வரை நீட்சி பெறுகிறது. சிலவேளைகளில் இது முன்னங்கை வரை நீட்சி பெறுகிறது. முற்றிய நிலையில், சில நோயாளிகள் கையில் பலவீனம் மற்றும் திசு அழிவுறுதலை அனுபவிக்கிறார்கள். பொதுவாக மணிக்கட்டு குகை நோய் தொகுப்பு பெண்களுக்கும், நீரிழிவு நோய், உடல் பருமன் (obesity), எலும்பு தேய்மானம், வாதம் (arthirits) போன்ற ஆபத்து காரணிகளாலும், சில குறிப்பிட்ட வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கும் முன்னதாக மணிக்கட்டு எலும்பு முறிவு உள்ளவர்களுக்கும் உண்டாகலாம். நரம்பின் மீது அழுத்தத்தை குறைக்கவும் , வலியினைக்குறைக்கவும் , உணர்வு மற்றும் கை செயல்பாட்டை மேம்படுத்தவும் பலர் அறுவை சிகிச்சை மேற்கொள்கிறார்கள். சி.டி.எஸ் அறுவை சிகிச்சையை தொடர்ந்து சிலவேளைகளில் நோயாளிகள் புனர்வாழ்வு பெறுவர். மீட்டெழலை துரிதப்படுத்தவும், வலி அல்லது அறுவை சிகிச்சையினால் உண்டாகும் அறிகுறிகளைக் குறைக்கவும் புனர்வாழ்வு சிகிச்சை உதவும் என்று நம்பப்படுகிறது. இந்த திறனாய்வு, முதலில், 2013-ல் வெளியான திறனாய்வின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும்.

ஆய்வு பண்புகள்

2015 செப்டெம்பர் 29ல் நாங்கள் புனர்வாழ்வு சிகிச்சையினை மற்றொரு புனர்வாழ்வு சிகிச்சைபெற்றவர்களோடு, அல்லது சிகிச்சை எதுவும் பெறாதவரோடு அல்லது போலிசிகிச்சை பெற்றவர்களோடு ஒப்பீடு செய்த மருத்துவ ஆய்வுகளைத் தேடினோம். நாங்கள் மணிக்கட்டு குகை நோய் தொகுப்புக்கான அறுவை சிகிச்சைக்குப் பிறகு அளிக்கப்பட பல்வேறு புனர்வாழ்வுசிகிச்சைகளின் சாதக பாதகங்களை மதிப்பீடு செய்த 1521 பங்கேற்பாளர்கள் கொண்ட 22 ஆய்வுகளைக் கண்டோம்.இவற்றுள் இரண்டு ஆய்வுகள் புதிதாக இந்த மேம்படுத்தல் நேரத்தில் அடையாளம் காணப்பட்டது. இவற்றுள் இரண்டு ஆய்வுகள் புதிதாக இந்த மேம்படுத்தல் நேரத்தில் அடையாளம் காணப்பட்டது.

முக்கிய முடிவுகள் மற்றும் சான்றின் தரம்

மணிக்கட்டு சிம்புடன் முட்டுஅசைவு, அறுவைச் சிகிச்சைக்கு பின் காயக்கட்டுகள், உடற்பயிற்சி, குளிர் மற்றும் ஐஸ் கட்டிகள் கொண்டு சிகிச்சை, பலவிதமான கை புனர்வாழ்வு முறைகள் சேர்த்து அளிப்பது, இலேசர் சிகிச்சை, மின் சிகிச்சை, வடு உணர்வு நீக்கம் மற்றும் அர்நிக்கா போன்ற சிகிச்சைகளை ஆய்வு செய்த ஆராய்ச்சிகளில் இருந்து எங்களால் வரையறுக்கப்பட்ட மற்றும் குறைந்த தர சான்றுகள் மட்டுமே கண்டறியப்பட்டது. சிகிச்சையின் பாதுகாப்பு பற்றி சில ஆய்வுகளே அறிவித்தன.

மணிக்கட்டு குகை நோய் தொகுப்புக்கு உடற்பயிற்சி மற்றும் மூட்டசைவு சிகிச்சையின் திறன் பற்றி அறிய. குறிப்பாக நீடிப்புத்திறன் மற்றும் நீண்ட கால தாக்கம் பற்றி அறிய மேலும் ஆராய்ச்சிகள் தேவை.

இந்த ஆதாரம் செப்டம்பர் 2015 நிலவரப்படியானது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர்.

Tools
Information