பக்கவாத புனர்வாழ்வுக்கு நுண்துளை (குத்தூசி) மருத்துவம்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பு பார்க்க தயவு செய்து இங்கே கிளிக் செய்யவும்.

பக்கவாதம் புனர்வாழ்வுக்கான நுண்துளை (குத்தூசி) மருத்துவத்தின் திறன்களை பற்றிய தெளிவான சான்றுகள் இல்லை. நுண்துளை (குத்தூசி) மருத்துவத்தின் உயிரியல் பண்புகள் பக்கவாதம் இருந்து மீட்பு மேம்படுத்த அல்லது புனர்வாழ்வை எளிதாக்கலாம். ஒரு மாததிற்கு மேல் பாதிக்கப்ட்ட பக்கவாத நோயாளிகளுக்கு நுண்துளை (குத்தூசி) மருத்துவதுடன் கட்டுப்பாட்டு குழுவில் இருந்த நோயயளிகளுடன் ஒப்பிட்ட சமவாய்ப்பு சோதனைகளை இந்த திறனாய்வு கண்டறிந்தது. ஐந்து அராய்ச்சிகள் கண்டறியப்பட்டது ஆனால் அவை அனைத்தும் மோசமான தரத்தில் இருந்ததது. இது போன்ற நோயாளிகளுக்கு நுண்துளை (குத்தூசி) மருத்துவத்தின் திறன் பற்றி எந்த திட்டவட்டமான முடிவுக்கு வர இயலவில்லை. மேலும் பெரிய, உயர் தரமான சமவாய்ப்பு சோதனைகள் தேவை.

மொழிபெயர்ப்பு: 

மொழிபெயர்ப்பு: சி.இ.ப.ஏன்.அர்.குழு

Share/Save