முடக்கு வாதத்திற்கான குத்தூசி மற்றும் மின்-குத்தூசி சிகிச்சை

முடக்கு வாதத்திற்கு குத்தூசி சிகிச்சை வேலை செய்யுமா?

குறைந்த முதல் இடைநிலை தரம் கொண்ட இரண்டு ஆய்வுகள் திறனாய்வு செய்யப்பட்டன, மற்றும் அவை இன்றைக்கான சிறந்த ஆதாரத்தை நமக்கு அளிக்கிறது. முடக்கு வாதம் கொண்ட 84 மக்களை இந்த ஆய்வுகள் பரிசோதித்தன. இந்த ஆய்வுகள், குத்தூசியை போலி சிகிச்சை அல்லது ஒரு ஸ்டீராய்டு ஊசியோடு ஒப்பிட்டன. வாரம் ஒரு முறை அளிக்கப்பட்ட ஒரு சிகிச்சை அல்லது ஐந்து சிகிச்சைகளுக்கு பிறகு, முன்னேற்றங்கள் அளவிடப்பட்டன.

தோள் வலியை எது ஏற்படுத்துகிறது மற்றும் குத்தூசி சிகிச்சை எவ்வாறு உதவ முடியும்?முடக்கு வாதம் என்பது, உடலின் நோய் தடுப்பாற்றல் அமைப்பை உடலின் சொந்த ஆரோக்கியமான திசுக்களே தாக்கும் ஒரு நோயாகும். இந்த தாக்குதல் பெரும்பாலும் கைகள், மற்றும் கால்களில் உள்ள மூட்டுகளில் ஏற்படும் மற்றும் மூட்டுகள் சுற்றி சிவத்தல், வலி, வீக்கம் மற்றும் வெப்பத்தை ஏற்படுத்தும். வலி மற்றும் வீக்கத்தை குறைப்பதற்கு மருந்துகள் அல்லது மருந்தில்லா-சிகிச்சைகள் பயன்படுத்தப்படுகின்றன.

குத்தூசி சிகிச்சை, மெல்லிய ஊசிகளைக் கொண்டு உடலின் சில குறிப்பிட்ட இடங்களில் செலுத்தப்படும் ஒரு மருந்தில்லா சிகிச்சையாகும். வலியை குறைக்கும் வேதியல் கூட்டு பொருள்களை உடலினுள் வெளியிடுவதன் மூலம், வலி அறிவிப்பு குறிகைகளை முந்தி செல்வதன் மூலம், அல்லது ஆற்றலை அல்லது இரத்த ஓட்டத்தை உடலினுள் தடையற்று ஓட அனுமதிப்பதன் மூலம் குத்தூசி சிகிச்சை வேலை செய்கிறது என்று எண்ணப்படுகிறது. குத்தூசி சிகிச்சை வேலை செய்யுமா அல்லது பாதுகாப்பானதா என்பது தெரியவில்லை.

ஆய்வுகள் என்ன காட்டுகின்றன?ஒரு ஆய்வில், மக்கள் குத்தூசி சிகிச்சை அல்லது போலி சிகிச்சையை, வாரம் ஒரு முறை, ஐந்து வாரங்களுக்கு மேற்கொண்டனர். வலி, வீக்க மற்றும் மென்மையான மூட்டுகளின் எண்ணிக்கை, நோய் தீவிர நிலை, ஒட்டுமொத்த ஆரோக்கியம், ஆய்வக முடிவுகள், அல்லது தேவைப்பட்ட வலி நிவாரண மருந்துகளின் அளவு ஆகியவை குத்தூசி சிகிச்சை அல்லது போலி சிகிச்சை மேற்கொண்ட மக்களில் ஒரே மாதிரியாக இருந்தன.

மற்றொரு ஆய்வில், குத்தூசி சிகிச்சையோடு ஊசிகளின் மூலம் மின்சாரம் கடத்தப்பட்டு, முழங்காலில், குறிப்பிட்ட அல்லது உண்மையான அல்லது போலியான குத்தூசி புள்ளிகளில் மக்களுக்கு செலுத்தப்பட்டன. உண்மையான குத்தூசி சிகிச்சை மேற்கொண்ட மக்களில், ஓய்வின் போது , நகரும் போது ,மற்றும் நிற்கும் போது ஏற்படும் முழங்கால் வலி வெகுவாக குறைந்தது. இந்த முன்னேற்றம், குத்தூசி சிகிச்சையின் நான்கு மாதங்களுக்கு பிறகு நீடித்தது. துரதிர்ஷ்டவசமாக, இந்த திறனாய்வின் ஆசிரியர்கள், இந்த சோதனை தரம் குறைந்தது எனவும் மற்றும் குத்தூசி சிகிச்சை எவ்வளவு அதிகமாக வேலை செய்யும் என்பதை அதிகப்படியாக கணக்கிட்டு இருக்கலாம் என்று நம்புகின்றனர்.

எந்த அளவு இது பாதுகாப்பானது?பக்க விளைவுகள் இந்த ஆய்வுகளில் அளவிடப்படவில்லை.

அடிப்படை சாராம்சம் என்ன?ஆதாரத்தின் தரம், 'வெள்ளி' ஆகும்.

இருப்பில் இருக்கும் சிறிய ஆதாரத்திலிருந்து, முடக்கு வாதத்தின் அறிகுறிகளை குத்தூசி சிகிச்சை முன்னேற்றாது என்று தெரிகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information