முடக்குவாதம் உடைய பெரியவர்களுக்கு, அந்நோய் பற்றிய விளக்கக்கல்வி குறுகிய காலகட்டத்திற்கு நன்மைகளை அளிக்கும் எனக் காட்டுகிறது.

முடக்குவாதம் உடைய நோயாளிகளின் ஆரோக்கிய நிலையில் (வலி , செயல் இயலாமை, மன நலம் மற்றும் நோயின் செயல்நிலை) இந்நோய் பற்றிய விளக்கக்கல்விச் சிகிச்சை முறைகளின் பயன்களை ஆராய்வதே இதன் நோக்கம். ஆரம்ப கட்டத் தொடர்கண்காணிப்பின் போது, நோய் பற்றிய விளக்கக் கல்வியானது இயலாமை, மூட்டுக்களின் எண்ணிக்கை, நோயாளியின் ஒட்டு மொத்த நல மதிப்பீடு, மன நிலை, மனச்சோர்வு ஆகியவற்றின் மீது சிறிதளவு நன்மையான விளைவை அளித்தது. ஆனால் தொடர் கண்காணிப்பின்முடிவில் (3-14 மாதங்களில்), குறிப்பிடத்தக்க நன்மைகளுக்கான எந்த ஆதாரமுமில்லை என கண்டறியப்பட்டது

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி. இந்த மொழிபெயர்ப்பு குறித்த கேள்விகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்: cynthiaswarnalatha@gmail.com (அல்லது) atramalingam@gmail.com.

Tools
Information