நாள்பட்ட சிறுநீரக நோய் கொண்ட வயது வந்தவர்களுக்கான உடற்பயிற்சி பயிற்றுவிப்பு

உடற்பயிற்சி திட்டங்களானது, அடுக்கு நிகழ்வு, தீவிரம், பயிற்றுவிப்பின் கால அளவு ​அத்துடன் செயற்பாட்டின் வகை மற்றும் தனிநபரின் ஆரம்ப நிலை, உடல் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இந்த காரணிகளை வழக்கமான உடற்பயிற்சி பயிற்றுவிப்பைக் கொண்டோ மற்றும் அல்லது மறுவாழ்வு சிகிச்சையைக் கொண்டோ இலக்கை அடைய நோக்கம் கொள்ளும் போது கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்.

இந்த திறனாய்வில், 1863 பங்கேற்பாளர்களுக்கு சமவாய்ப்பளிக்கப்பட்ட நாற்பத்தி ஐந்து ஆய்வுகள் சேர்க்கப்பட்டது. மெட்டா-பகுப்பாய்வுகளில் சேர்க்கப்படத்தக்க தரவை முப்பத்தி-இரண்டு ஆய்வுகள் அளித்தன. ஒழுங்கான உடற்பயிற்சி பயிற்றுவிப்பு, உடலுறுதி, உடல் செயல்பாடு (எ.கா. நடைபயிற்சி திறன்) மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் (க்ரோனிக் கிட்னி டிசிஸ், சி.கே.டி) கொண்ட வயது வந்தவர்களின் ஆரோக்கியம்-தொடர்புடைய வாழ்க்கை தரம் ஆகியவற்றை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தியது என்று இந்த திறனாய்வு காட்டியது. இரத்த அழுத்தம் போன்ற இதர விளைவு அளவீடுகள் மேலும் பயனுள்ள விளைவுகள் காணப்பட்டது, ஆனால் மிக குறைந்த ஆராய்ச்சிகள் மற்றும் அல்லது சிறியளவு ஆராய்ச்சி மக்கள் தொகைகளால் அவற்றின் சான்று நிலை சற்று குறைவாகவே இருந்தது. கூழ்மப்பிரிப்பு சிகிச்சை இன்னும் தேவைப்படாத நாள்பட்ட சிறுநீரக நோய் கொண்ட வயது வந்தவர்கள், கூழ்மப்பிரிப்பு (இரத்த கூழ்மப்பிரிப்பு மற்றும் வயிற்று உள்ளுறை கூழ்மப்பிரிப்பு) உடைய நோயாளிகள் மற்றும் சிறுநீரக மாற்று பெற்றவர்கள் ஆகியோரிலும் பயனுள்ள விளைவுகள் காணப்பட்டது.

எவ்வகையான உடற்பயிற்சிக் கோட்பாட்டை (பயிற்சி வகைகள், தீவிரம், அடுக்குநிகழ்வு மற்றும் உடற்பயிற்சியின் கால அளவு) விளைவின் அளவை சிறப்படையச் செய்வதற்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்கான ஆதாரம்-சார்ந்த தரவை மருத்துவர்களுக்கும் மற்றும் நோயாளிகளுக்கும் இந்த முறைப்படுத்தப்பட்ட திறனாய்வு மற்றும் மெட்டா-பகுப்பாய்வு அளிக்கிறது. இந்த முடிவுகளை மருத்துவர்கள் நடைமுறைப் படுத்த வேண்டும். மேலும், அவர்கள் ஒழுங்கான உடற்பயிற்சி பயிற்றுவிப்பு நன்மையான விளைவுகளை அளிக்கும் என்பதற்கு அறிவியல் சான்று இருக்கிறது என்று நாள்பட்ட சிறுநீரக நோய் கொண்ட வயது வந்தவர்களுக்கு ஊக்கமளித்து,​ தகவல் அளிக்கவும் வேண்டும், மற்றும் ஒழுங்கான உடற்பயிற்சியின் மூலம் நோயாளி மற்றும் மருத்துவரின் இலக்கை அடைய ஒரு போதிய உடற்பயிற்சி தலையீட்டை பயன்படுத்த வேண்டும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information