பார்க்கின்சன் நோய்க்கான இயன்முறை சிகிச்சை

பார்க்கின்சன் நோய்க்கு பல்வேறு மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகள் இருக்கின்ற போதிலும், நோயாளிகள் படிப்படியாக குறிப்பிடத்தக்க உடல் பிரச்சனைகளால் பாதிப்படைகின்றனர். இயன்முறை மருத்துவர்கள், பார்கின்சன் நோய் கொண்டவர்களின் நிலையை கண்காணிப்பு செய்வதின் மூலமாகவும் மற்றும் தகுந்த சிகிச்சை குறிக்கோள் மூலமாகவும் ​அவர்கள் தங்களின் அதிகபட்ச இயக்கம், செயல்பாடு, மற்றும் சாராதிருத்தல் ஆகியவற்றை பராமரிக்க உதவிப்புரிவதை நோக்கமாக கொண்டுள்ளனர். உடல் திறனை அதிகரிப்பதன் மூலம் மற்றும் பார்க்கின்சன் நோயின் மொத்த காலத்தும் தொடர்பான பிரச்சினைகளைக் குறைப்பதன் மூலமும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கம் கொண்ட பலதரப்பட்ட இயக்க புனர்வாழ்வு அணுகுமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகள் மட்டுமே இந்த திறனாய்வில் சேர்க்கப்பட்டது. இந்த ஆய்வுகளில், இயன்முறை சிகிச்சை தலையீடு பெற்ற ஒரு குழு பங்கேற்பாளர்கள் இயன்முறை சிகிச்சை தலையீடு பெறாத மற்றொரு குழு பங்கேற்பாளர்களுடன் ஒப்பிடப்பட்டனர். நியாயமான சோதனை நிறுவப்படும் பொருட்டு, பங்கேற்பாளர்கள் சீரற்ற முறையில் ஒரு குழுவில் நியமிக்கப்பட்டனர். 1827 பங்கேற்பளர்களை உள்ளடக்கிய முப்பத்தி-ஒன்பது சீரற்ற சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகள் இந்த திறனாய்விற்கு பொருத்தமானதாக அடையாளம் காணப்பட்டது. ஆய்வு முறைகள் பற்றி போதுமான தகவல் இல்லாததாலும் மற்றும் தலையீடு மறைப்பு சாத்தியமற்றதாய் இருந்ததாலும், சோதனைகளின் தரம் உயர்வாக இல்லை. இந்த சோதனைகள் பல்வேறு வகையான இயன்முறை சிகிச்சை தலையீடுகளை ஆய்வு செய்தது, ஆதலால் பயன்படுத்தப்பட்ட சிகிச்சை தலையீடுகளின் அடிப்படையில் சோதனைகள் தொகுக்கப்பட்டன (அதாவது, பொதுவான இயன்முறை சிகிச்சை, உடற்பயிற்சி, ஓடுபொறி பயிற்சி, தூண்டுதற் குறிப்புகள், நடனம் அல்லது தற்காப்பு கலைகள்).

இயன்முறை சிகிச்சையினால் அனைத்து நடைபயிற்சி விளைவுகளும் (10 அல்லது 20 மீட்டர் நடை சோதனை தவிர) மேம்பாடு அடைந்தன என்று குறிப்பிடப்பட்டது. எனினும், இந்த மேம்பாடுகள் நடைபயிற்சி வேகம், நடை நீட்சி மற்றும் நடை முடக்கம் ஆகியவற்றில் மட்டுமே குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் கண்டது. ஒரு இயன்முறை சிகிச்சை மூலம் இயக்கம் மற்றும் உடற்சமநிலை ஆகியவையும் முன்னேற்றம் கண்டதாய், ஒரு இயக்க பரிசோதனையிலும் (டைம்ட் அப் அண்ட் கோ டெஸ்ட், ஒரு நாற்காலியில் இருந்து எழுந்து ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு நடந்து, பின் திரும்பவும் நாற்காலிக்கு சென்று உட்காருவதற்கு எடுத்து கொள்ளும் நேரத்தை அளவிடும் பரிசோதனை), மற்றும் இரண்டு உடற்சமநிலை பரிசோதனைகளிலும் (பங்ஷனல் ரீச் டெஸ்ட், எவ்வளவு தூரம் ஒரு நபர் உடற்சமநிலையை இழக்காமல் அவன்/ அவளால் எட்ட முடியும் என்பதை சோதிக்கும் பரிசோதனை) மற்றொரு உடற்சமநிலையின் பல அம்சங்களை மதிப்பீடும் பரிசோதனையிலும் (பெர்க் பேலன்ஸ் ஸ்கேல்) குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் அறிக்கையிடப்பட்டது. இயன்முறை சிகிச்சையினால், ஒருங்கிணைக்கப்பட்ட பார்க்கின்சன் நோய் மதிப்பு அளவீட்டை (யுனிபைட் பார்க்கின்சன்'ஸ் டிசிஸ் ரேட்டிங் ஸ்கேல், UPDRS)பயன்படுத்தி மருத்துவர்-மதிப்பிட்ட இயலாமையும் மேம்பட்டது. இரண்டு குழுக்களுக்கும் இடையே, கீழே விழுதல் அல்லது நோயாளி-மதிப்பிடு செய்த வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் எந்த வேறுபாடும் இல்லை. ஒரு ஆய்வு, பாதகமான நிகழ்வுகள் அரிதாக இருந்தது என்று அறிக்கையிட்டது; வேறு எந்த ஆய்வுகளும் இந்த விளைவு பற்றிய தரவை பதிவு செய்யவில்லை. வெவ்வேறு இயன்முறை சிகிச்சை தலையீடுகளை ஒப்பிடுகையில், ஆராயப்பட்ட எந்தவொரு விளைவிற்கும் சிகிச்சை பலனின் மதிப்பீடு இயன்முறை சிகிச்சை தலையீடுகளிடையே வேறுபட்டன என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை என்று பரிந்துரைக்கபட்டது.

இந்த திறனாய்வு, பார்க்கின்சன் நோய்க்கான இயன்முறை மருத்துவ சிகிச்சையின் குறுகிய-காலக்கட்ட பலனின் ஆதாரத்தை வழங்குகிறது. கணிக்கப்பட்ட பெரும்பாலான வேறுபாடுகள் சிறியளவில் இருந்தாலும், நடைபயிற்சி வேகம், பெர்க் உடற்சமநிலை அளவு மற்றும் UPDRS- ஐ பயன்படுத்தி மருத்துவர்-மதிப்பிட்ட இயலாமை ஆகியவை நோயாளிகள் தங்களுக்கு முக்கியமானதென்று கருதும் அளவு இருந்தது. இந்த நன்மைகளை, சேர்க்கப்பட்டுள்ள சோதனைகளின் தரம் மற்றும் சிகிச்சை விளைவுகளை அளவிடும் பொதுவான மதிப்பீடு பற்றாக்குறை காரணங்களுக்காக எச்சரிக்கையுடன் விளக்கம் கொள்ள வேண்டும். இதனால், பகுப்பாய்வில் நாங்கள் பயன்படுத்தக் கூடிய தரவின் அளவு பாதிக்கப்பட்டது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information