ஜலதோஷத்திற்கு சூடான மற்றும் ஈரப்பதமுள்ள காற்று

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பு பார்க்க தயவு செய்து இங்கே கிளிக் செய்யவும்.

ஜலதோஷம் மனிதர்களுக்கு வரக்கூடிய மிகவும் பொதுவானதொரு தொற்று ஆகும். இதன் சாதாரண, தன்மையைக் கருத்தில்கொண்டு நோக்குகையில் இது பெரிய சிக்கல்கள் எதனையும் ஏற்படுத்தாது என்றாலும் இதனால் வரும் நோய் அறிகுறிகளின் அசெளகரியங்களால் வருகையின்மையை குறிப்பிடத்தக்க அளவில்அதிகரிக்க முனையும். நோய் அறிகுறிகள் மூலமே சாதாரண ஜலதோசம் கண்டறியப்படுகிறது மற்றும் அளிக்கப்படும் சிகிச்சையும் முக்கியமாக நோய்க்குறி சார்ந்ததாகவே உள்ளது. குறிப்பாக மனிதர்களில் சைடோகைன்ஸின் (cytokines) விளைவுகளை பற்றிய, புதிய தகவல்கள், ஜலதோஷம் மற்றும் சளிக்காய்ச்சல், அறிகுறிகளான ஜுரம், பசியின்மை,சீதளம்,உடல் சோர்வு, தலைவலி, தசைநோவு,மற்றும் வலி ஆகியவற்றை விளக்குவதற்கு உதவுகிறது. இவற்றிற்கு பல நோய் அறிகுறிகள் பொதுவாக ஜவ்வு வீக்கம் மற்றும் நாசியின் உட்புறம் சளி கட்டியாவதனால் ஏற்படும் நாசி அடைப்பு போன்றவையே காரணம் என்று கருதப்படுகிறது.

பல ஆண்டுகளாக ஆவிபிடித்தல் மூலம் சளியை இலகுவாக இறக்க முடியும் என்ற நம்பிக்கையில் ஜலதோஷத்திற்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. மேலும் ஜலதோஷ கிருமிகள் வெப்பத்தினால் பாதிக்கப்படுகிறது என்பதற்கு ஆய்வக சான்றுகள் உள்ளன. இந்த சிகிச்சையின் பயனை உறுதிசெய்ய எந்தஒரு பெரிய அளவு ஆராய்ச்சிகளும் இல்லை. இருந்தபோதிலும் நீராவிபிடித்தல் ஜலதோஷத்தின் அறிகுறிகளுக்கு மனதளவிலான தீர்வை கொடுப்பதினால் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த காக்ரேன் திறனாய்வு முடிவுகள் ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்ட387 பேர்களை கொண்ட 6 ஆய்வுகளில் இருந்து பெறப்பட்டது. இதில் 215 பேர் இயற்கையாக ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்gal, 172 பேர் செயற்கை முறையில் கிருமியை செலுத்தி ஜலதோஷம் உண்டுபண்ணப்பட்ட ஆரோக்கியமான மனிதர்கள். ஒரே விளைவுபயன்களை குறிப்பிட்ட ஆராய்ச்சிகளில் இருந்து கிடைத்த தரவுகளை நாங்கள் ஒன்று சேர்த்துள்ளோம். ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் சாதகமான முடிவுகளை காண்பித்த நிலையில் , வட அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் எந்த ஒரு பயனையும் காண்பிக்கவில்லை.குறிப்பிட்ட இடத்தில் ஏற்படும் அசௌகரியம், முக ஒப்பனை களைதல் போன்றவைகளுடன் ,ஒரு ஆராய்ச்சியில் மூக்கு அடைப்பு அதிகரித்தல் போன்றவையும் எதிர்மறை விளைவுகளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில ஆராய்ச்சிகள் ஜலதோஷத்திற்கு ஆவிபிடித்தல் நோய் அறிகுறிகளுக்கு பயனுள்ளதெனவும் பிற ஆராய்ச்சிகள் ஆவிபிடித்தல் பயனற்றதெனவும் கண்டறிந்துள்ளதாக இந்த திறனாய்வு காட்டுகிறது. ஜலதோஷத்திற்கு ஆவிபிடித்தலை ஒரு பயனுள்ள சிகிச்சைமுறை என்று கூற போதுமான சான்றுகள் இல்லை என்பதே இதன் முடிவாகும். இதில் எந்த ஒரு ஆராய்சியும் குழந்தைகளை உட்படுத்தவில்லை.

மொழிபெயர்ப்பு: 

மொழிபெயர்ப்பு: கா.அழகு மூர்த்தி மற்றும் சி.இ.பி.என்.அர் குழு

Share/Save