மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது ஆழ்நாளக் குருதியடைப்பு ஏற்படாமல் தடுக்க அளவுகோடிட்ட அழுத்தக்காலுறைகள்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

மருத்துவமனையில்,அறுவை சிகிச்சை அல்லது நோய் பாதிப்பினால் உடல் அசைவில்லாமல் இருக்கும் நோயாளிகளுக்கு இடுப்பு மற்றும் கால் பகுதிகளில் ஆழ்நாளக் குருதியடைப்பு (DVT) ஏற்படுகிறது நோய் அறிகுறிகள், வேறுபட்ட அறிகுறிகளான வலி மற்றும் விக்கம் முதல் அறிகுறிகளே இல்லாமல் இருப்பது வரை உள்ளடங்கியது. காலில் ஏற்படும் இரத்த உறைவு நுரையிறலுக்கு சென்று சுவாசப்பைப் பிறபொருள்தடுக்கை (pulmonary embolism (PE)) ஏற்படுத்தலாம் மற்றும் இவை மரணத்தையும் ஏற்படுத்தலாம். DVT பொதுவாக சரியாகிவிடும் அல்லது கால்களில் உயர் சிரைநாள அழுத்தம், கால்களில் வலி, தோல் கருத்தல் அல்லது வீக்கம் போன்ற நீண்ட கால விளைவுகளை eற்படுத்தலாம்.

டிவிடியை (DVT) அழுத்தம் அல்லது மருந்துகளை பயன்படுத்தி தடுக்கலாம். இந்த மருந்தினால் இரத்த கசிவு, குறிப்பாக அறுவை சிகிச்சை நோயாளிகளில், ஏற்படலாம் என்பது ஒரு முக்கிய இடர்ப்பாடு. அளவுகோடிட்ட அழுத்தக்காலுறைகள் (GCT) வெவ்வேறு இடத்தில் வெவ்வேறு அழுத்தமாக அணிவிப்பதன் மூலம் கால்களில் உருவாகும் இரத்த கட்டிளை தடுக்கலாம் நாங்கள் 19 சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகள் கண்டறிந்தோம் (1681 தனிப்பட்ட நோயாளிகளும் 1064 தனிப்பட்ட கால்களும் கொண்ட 2745 பகுப்பாய்வு பகுதி.) 8 சோதனைகளில் காலுறைகள் அணிவதையும் மற்றும் எந்த காலுறைகளையும் அணியாததையும் ஒப்பிடபட்டுள்ளது. 10 சோதனைகளில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட நோயாளிகளுக்கு காலுறைகளுடன் மற்ற ஒரு முறையும் ஒப்பிடப்பட்டுள்ளது. டெக்ஸ்டரன் 70 , ஆஸ்பிரின், ஹெப்பாரின் மற்றும் இயந்திர தொடர் சுருக்க முறையை ஆகியவை மற்ற பயன்படுத்தபட்டுள்ள முறைகள். இந்த பத்தொன்பது ஆராய்ச்சிகளில், 9 ஆராய்ச்சியில் பொது அறுவை சிகிச்சை மேற்கொண்ட நோயாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர், எலும்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட நோயாளிகள் 6 ஆராய்ச்சியில் சேர்க்கப்பட்டுள்ளனர், மற்றும் ஒரே ஒரு ஆராய்ச்சிக்கு மருத்துவ (medical patient) நோயாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். பட்டம் அழுத்தம் தரும் காலுறைகள் அறுவை சிகிச்சைக்கு முன் அல்லது அறுவைசிகிச்சை நாளில் பயன்படுத்தப்பட்டது மற்றும் நோயாளிகள் மருத்துவமனை இருந்து விடுவிக்கப்படும் வரை அல்லது நோயாளிகள் முழுமையாக அசையும் காலம் வரை அனியப்பட்டுள்ளது. சேர்க்கப்பட்டுள்ளது ஆராய்ச்சிகளில் பெரும்பாலனோர் கதிரியிக்க I125உள்வாங்குதல் சோதனையின் மூலம் DVT உள்ளதாக கண்டறியப்பட்டனர். பொதுவாக சேர்க்கப்பட்டுள்ள ஆராய்ச்சிகளின் நல்ல தரம் வாய்ந்தவையாக இருந்தது.

எங்கள் பகுப்பாய்வு, மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட நோயாளிகளுக்கு GCS சிக்கிச்சை டிவிடி ஏற்படும் அபாயத்தை குறைக்கும் என்று உறுதி படுத்தியுள்ளது. குறைந்த அளவு பங்கேற்பார்கள் கொண்ட ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இருப்பினும், GCSகள் தொடைகளில் DVT (அருகாமை DVT) மற்றும் PE உருவாகும் அபாயத்தை குறைக்கும் என்பதையும் இந்த பகுப்பாய்வு எடுத்துக்காட்டியுள்ளது. சேர்க்கப்பட்ட ஆராய்ச்சிகளில் பக்க விளைவுகள் மற்றும் GCS அணிவதினால் ஏற்படும் சிக்கல்கள் பற்றி சரியாக தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. ஒரே ஒரு ஆராய்ச்சி அடிப்படையிலலான குறைந்த அளவிலான ஆதாரங்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு (அறுவை சிக்கிச்சை அல்லா) GCS DVT வருவதை தடுக்கலாம் என்பதை தெரிவிக்கிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: க. ஹரிஓம்,பிறைசூடன் ஜெயகாந்தன் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு