Mycobacterium vaccae கொண்ட எதிர்ப்புசக்தி சிகிச்சை முறை காச நோயாளிகளுக்கு எந்த நன்மையும் அளிப்பதில்லை.

மருத்துவர்கள், ஒருவர் நோய்வசபடாமல் இருப்பதற்காகவும் அல்லது உடலுக்கு நோயின் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காகவே ஒருவரின் எதிர்ப்புசக்தியை ஊக்கவிக்க ஊசி மருந்தினை பயன்படுத்துகின்றனர், M Vaccae என்னும் பாக்டீரியா கிருமி காச நோய் உருவாக்கும் கிருமியுடன் தொடர்புடைய ஒன்று. இந்த கிருமியை ஊசியின் மூலம் நோயாளியின் உடலுக்குள் செலுத்தினால் காச நோயின் தாக்கம் குறையுமா என்று ஆராய்ச்சியாளர்கள் வியந்தார்கள். ஏனென்றால், ஆரம்ப ஆய்வுகள் சில இது சரியாக இருக்கலாம் என்ற தோற்றம் அளித்தது. ஆனால் எட்டு ஆய்வுகளை திறனாய்வு செய்தபொது இறப்பிலோ அல்லது நோய் தாக்குதலிருந்து பாதுகாபத்திலோ இந்த ஊசி மருந்து ஒரு நிலையான விளைவுகளை ஏற்படுத்தவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. ஒருவேளை முந்தைய ஆய்வுகள் பின்பற்றிய ஆய்வு முறைகளில் ப்ரிச்சினைகள் இருந்ததினாலும் இந்த சிகிச்சை முறையானது நல்ல விளைவுகளை தரும் என்ற போலியான அல்லது தவறான நம்பிகையை உருவாக்கி இருக்கலாம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: தெற்காசிய காக்ரேன் குழு [திருமதி செல்லுவப்பா, ஜாபெஸ் பால்]

Tools
Information