தாய் பாலூட்டும் தாய்களுக்கான ஆதரவு

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பு பார்க்க தயவு செய்து இங்கே கிளிக் செய்யவும்.

பச்சிளங் குழந்தைகள் ஆறு மாத வயது வரை பிரத்தேயகமாக தாய் பாலூட்டப்பட வேண்டும் மற்றும் இரண்டு வருட வயது வரை பச்சிளங் குழந்தையின் உணவுத் திட்டத்தில் ஒரு முக்கியமான அங்கமாக தாய்ப்பால் தொடரப்படவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. தாய் பாலுட்டாமல் இருப்பது, பச்சிளங் குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களுக்கு குறுகிய-கால மற்றும் நீண்ட-கால ஆரோக்கிய அபாயத்தை ஏற்படுத்தும் என்பதற்கு அதிகளவிலான ஆதாரம் இருப்பதே இதற்கு காரணமாகும். நல்ல பராமரிப்பு மற்றும் ஆதரவுடன் தடுக்கப்பட முடிந்த பெரும்பாலான பிரச்னைகளால், பல தாய்மார்கள் தேவைப்படுவதற்கு முன்பதாகவே பாலூட்டுவதை நிறுத்துவர். இந்த குறித்த காலத்திற்கு முந்தைய தொடராமை, தாய்மார்களுக்கு ஏமாற்றம் மற்றும் வேதனையை ஏற்படுத்தக் கூடும் மற்றும் அவர்களுக்கும் பச்சிளங் குழந்தைகளுக்கும் ஆரோக்கிய பிரச்னைகளை ஏற்படுத்தும். மறுநம்பிக்கை, புகழ்ச்சி, தகவல், மற்றும் கலந்துரையாடுவதற்கு ஒரு வாய்ப்பு தருதல் மற்றும் தாயின் கேள்விகளுக்கு பதிலளித்தல் ஆகியவை பாலூட்டுவதற்கான ஆதரவில் அடங்கும். வழக்கமான மகப்பேறு பராமரிப்பை ஒப்பிடுகையில், தொழில் வல்லுநர்கள் அல்லது பயிற்சியளிக்கப்பட்ட பொது மக்கள் அல்லது இருவர் மூலம் பாலூட்டும் தாய்களுக்கு வழங்கப்படும் கூடுதலான ஆதரவு, தாய்மார்கள் அவர்கள் தாய்பாலூட்டுவதை தொடர உதவுமா என்பதை இந்த திறனாய்வு கண்டது. 21 நாடுகளிலிருந்து, 56,000-க்கும் அதிகமான பெண்களை சேர்த்திருந்த 52 சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளை இந்த திறனாய்வு கண்டது. அனைத்து வகையான கூடுதல் ஆதரவின் கூட்டு பகுப்பாய்வு, பெண்கள் தாய்பாலூட்டுவதை தொடர்ந்த கால அளவின் அதிகரிப்பையும் எனவும் மற்றும் பிற வகையான திரவங்கள் அல்லது உணவுகளை அறிமுகப்படுத்தாமல் தாய்பாலூட்டுவதை தொடர்ந்த கால அளவின் அதிகரிப்பையும் காட்டின. தொழில் வல்லுநர்கள் அல்லது பயிற்சியளிக்கப்பட்ட பொது மக்கள் மூலம் அளிக்கப்பட்ட ஆதரவு, தாய்பாலூட்டல் விளைவுகளின் மேல் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. தொலைபேசி ஆதரவை விட, முக-முகமாய் அளிக்கப்பட்ட ஆதரவு பெரியளவு சிகிச்சை விளைவோடு சம்பந்தப்பட்டிருந்தது. பெண்கள் உதவி தேடும் போது மட்டும் அளிக்கப்பட்ட ஆதரவு திறனுடையதாக இருப்பதற்கு சாத்தியமில்லை. எதிர்பார்ப்போடு, அட்டவணையோடு, மற்றும் தொடரப்பட்ட சந்தித்தல்களோடு பெண்களுக்கு ஆதரவு அளிக்கப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. தாய் பாலூட்டும் ஆரம்ப முயற்சிகளின் பின்புல நிகழ்வுகள் அதிகமாக இருந்த போது, கூடுதலான ஆதரவை வழங்கும் சிகிச்சை தலையீடுகள் முனைப்பான விளைவை கொண்டிருந்தன. இந்த ஆய்வுகளில், ஆதரவு சிகிச்சை தலையீடுகள் பற்றி பெண்களின் கருத்துகள் சரிவர அறிக்கையிடப்படவில்லை. அமைப்பிற்கு மற்றும் மக்கள் குழுவின் தேவைகளுக்கு ஏற்றவாறு ஆதரவு இருக்க வேண்டும். ஆதரவின் எந்த வகையான கூறுகள் மிகவும் திறன் மிக்கவையாக இருக்கும் என்பதை கண்டறிவதற்கு மேற்படியான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Share/Save