நிலையான நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்க்கான உபரி ஊட்டச்சத்து

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (க்ரோனிக் அப்ஸ்ட்ரக்டிவ் பல்மனரி டிசிஸ், சிஓபிடி) கொண்ட மக்களில் குறைந்த உடல் எடை மிக பொதுவானதாகும். அது, அவர்களின் இதயம் மற்றும் நுரையீரல் செயலை பலவீனமாக்கி, மற்றும் அவர்களின் உடற்பயிற்சி செய்யும் திறனை குறைக்கும். சிஓபிடி கொண்ட மக்களில் ஓரளவு ஊட்டச்சத்து குறைபாடு பொதுவானதாகும், ஆனால் அவர்களின் உடற் சீர் குலைவிற்கு இது தான் காரணமா, அல்லது நோயின் தீவிரத்தில் அது வெறும் ஒரு பகுதிய என்பது தெளிவாக தெரியவில்லை. சிஓபிடி கொண்ட நோயாளிகளில், இரண்டு வாரங்களுக்கு மேலாக உபரி ஊட்டச்சத்து அளித்த 17 ஆய்வுகள் (632 பங்கேற்பாளர்கள்) கொண்ட இந்த திறனாய்வு, உபரி ஊட்டச்சத்து உடல் எடை, சுவாச தசைகளின் வலிமை, நடை, மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை மேம்படுத்தியது என்பதற்கு வளரும் ஆதாரத்தை கண்டது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information