சொறி சிரங்கிற்கான சிகிச்சை தலையீடுகள்

சொறி சிரங்கு, (ஸ்கேபிஸ்) என்பது தோலின் ஒரு ஒட்டுண்ணி தொற்றாகும். அது, உலகம் முழுவதும் ஏற்படக் கூடும், ஆனால், மோசமான சுற்றுப்புற சுகாதாரம், கூட்டநெரிசல், மற்றும் சமூக இடையூறு கொண்ட பகுதிகளில் இது குறிப்பாக பிரச்னைக்குரியதாக உள்ளது மற்றும் இது, அநேக வள-குறைவான நாடுகளில், ஆண்டுத் தோறும் ஏற்படக் கூடியதாக உள்ளது. சொறி சிரங்கின் உலகளவு பரவல் 30 கோடி மக்களில் உள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால், தொற்றின் மட்டங்கள் நாடுகள் மற்றும் சமூகங்களிடையே வேறுப்படுகிறது. தோலினுடே முட்டைகள் இட பெண் உண்ணி துளையிடும், மற்றும் அவை அதன் பின் குஞ்சு பொரித்து பெருகும். இந்த தொற்று, பாலியல் தொடர்பு உட்பட நேரடி தோல் தொடர்பு மூலம் ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபருக்கு பரவக் கூடும். இது, தோலில் வெடிப்பு ஏற்படும் வகையில் தீவிரமான சொரிதலை உண்டாக்கும். சொறி சிரங்கை குணப்படுத்த அநேக வகையான மருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன, மற்றும் மூலிகை மற்றும் பாரம்பரிய மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தையும், சோதனைகளின் இந்த திறனாய்வு உள்ளடக்க முயற்சி செய்தது. வள-குறைவான நாடுகளில் நடைபெற்ற 19 சோதனைகளோடு, 2676 மக்களை சம்மந்தப்படுத்திய 22 சிறிய சோதனைகளை ஆசிரியர்கள் அடையாளம் கண்டனர். சொறி சிரங்கிற்கு, பெர்மெத்ரின் மிக திறன் வாய்ந்த புற மருந்து சிகிச்சையாக, மற்றும் ஐவர்மேக்டின் திறன் வாய்ந்த வாய் வழி மருந்து சிகிச்சையாக காணப்பட்டன. எனினும், அநேக நாடுகளில் ஐவர்மேக்டினை இதற்கு பயன்படுத்துவதற்கு உரிமம் இல்லை. அரிப்பு, வாந்தி, மற்றும் வயிற்று வலி போன்ற பாதகமான நிகழ்வுகள் அறிக்கையிடப்பட்டன, கடுமையான ஆனால், அரிதான சாத்தியமான பாதக நிகழ்வுகளை சரிவர மதிப்பிட சோதனைகள் மிகவும் சிறிதாக இருந்தன. சேர்க்கைக்கு, மூலிகை அல்லது பாரம்பரிய மருந்துகளுக்கான சோதனைகள் அடையாளம் காணப்படவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information