கேன்சர் நோயாளிகளில் பூஞ்சை தொற்றுகளைத் தடுப்பதற்கான அம்போடெரிசின் B அல்லது ஃப்ளுகோநசோல்.

கீமோதெரபி அல்லது எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மூலம் சிகிச்சையளிக்கப்படும் கேன்சர் நோயாளிகள் பூஞ்சை தொற்றுகளை பெறுவதில் அதிகரித்த அபாயத்தைக் கொண்டுள்ளனர். அத்தகைய தொற்றுகள் உயிருக்கு ஆபத்தானவையாகும். அத்தகைய நோயாளிகளுக்கு காய்ச்சல் ஏற்படும் போது, பூஞ்சை நீக்கி மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. அம்போடெரிசின் B மற்றும் ஃப்ளுகோநசோல் இடையே விளைவில் எந்த வித்தியாசத்தையும் இந்த திறனாய்வினால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. ஆனால், நோயுற்ற நிலை மீது விளைவைக் கொண்ட ஒரே பூஞ்சை நீக்கி மருந்தான அம்போடெரிசின் B-ஐ ஆதரிக்காத வகையில் அநேக சோதனைகள் வடிவமைக்கப்பட்டு அல்லது பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information