வயதானவர்களுக்கு எலும்புப்புரையினால் உண்டாகும் எலும்பு முறிவை தடுக்க வைட்டமின் டி மற்றும் வைட்டமின் டி ஒத்தப்பொருட்கள்

ஏன் முதியவர்களுக்கு எலும்பு முறிவுகள் ஏற்படுகின்றன ?

மாதவிடாய் நின்ற பெண்களிடமும் மற்றும் வயதான ஆண்களிடமும் முதுமை காரணமாக ஏற்படும் எலும்பு பலவீனத்தால் (எலும்பு புரை )இடுப்பு எலும்பு முறிவு மற்றும் இதர வகையான எலும்பு முறிவுகள் பொதுவாக (பரவலாக ) ஏற்படுகிறது.

வயதானவகளுக்கு எலும்பு முறிவின் தாக்கம் (பாதிப்பு ) என்ன?

எலும்புப்புரை (ஆஸ்டியோபோரோசிஸ்) காரணமாக எலும்பு முறிவுகள் பெரும்பாலும் இடுப்பு, மணிக்கட்டு அல்லது முதுகுத்தண்டில் ஏற்படலாம் மற்றும் அது கணிசமான இயலாமை அல்லது மரணத்தையும் ஏற்படுத்தலாம். இதில் உயிர் தப்பியவர்கள் நடமாட்டம் குறைவாக இருப்பது இல்லாமல் அவர்களுக்கு அதிக சமூக மற்றும் மருத்துவ பராமரிப்பு தேவைப்படலாம்.

ஏன் விட்டமின் டி உதவி செய்யலாம்?

வலுவான எலும்புக்கு வைட்டமின் டி அவசியம். வயதானவர்களிடையே வைட்டமின் டி அளவுகள் பொதுவாக குறைவாக இருப்பதற்கு. சூரிய ஒளி படுதல் பற்றாக்குறை மற்றும் தங்கள் உணவில் குறைவாக வைட்டமின் டி சேர்த்துகொள்ளுதல் ஆகும். எனவே, கூடுதல் வைட்டமின் D சத்தை பிற்சேர்ப்பு வடிவில் எடுத்துக் கொள்வதால் இடுப்பு எலும்பு முறிவு மற்றும் பிற எலும்புகளின் முறிவு ஏற்படும் ஆபத்தை குறைக்க உதவும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

திறனாய்வின் நோக்கம்

மாதவிடாய் நின்ற பெண்கள் மற்றும் வயதான ஆண்களுக்கு எலும்பு முறிவை தடுக்க வைட்டமின் டி அல்லது வைட்டமின் டி சார்ந்த பிற்சேர்ப்பு கால்சியத்துடன் அல்லது கால்சியம் இன்றி கொடுப்பதன் விளைவுகளை சோதிக்க.

திறனாய்வின் செயல்முறை

ஆய்வு ஆசிரியர்கள் டிசம்பர் 2012 வரையிலான மருத்துவ இலக்கியத்தை ஆராய்ந்து, மொத்தம் 91,791 மக்கள் பங்கெடுத்த, 53 சம்பந்தப்பட்ட மருத்துவ சோதனைகளை அடையாளம் கண்டனர். ஆய்வுகள் மருத்துவமனை மற்றும் மருத்துவ இல்லம் அமைப்புகளில் அல்லது சமுகத்தில் வாழும் 65 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு எலும்பு முறிவு பற்றிய விளைவுகளை வெளியிட்டது. இந்த ஆய்வுகள் வைட்டமின் டி அல்லது அதன் தொடர்பான கால்சியத்துடன் கூடிய அல்லது கால்சியம் இல்லாத ஊட்டச்சத்து மாத்திரைகளை, போலி ஊட்டச்சத்து பிற்சேர்ப்பு, எந்த ஒரு கூடுதலும் இல்லாத ஊட்டசத்து அல்லது, கால்சியம் கூடுதல் மட்டும். கொடுப்பதற்கு எதிராக ஒப்பிட்டது.

இந்த திறனாய்வின் கண்டுப்பிடிப்புகள்

ஆய்வுகளில் சோதித்த வடிவில் வைட்டமின் டி மட்டும் எடுத்துகொள்வது எலும்பு முறிவை தடுக்காது என்பதற்கு நம்பகமான ஆதாரங்களை இந்த திறனாய்வு கண்டறிந்தது. எனினும் வைட்டமின் டியை கால்சியம் பிற்சேர்ப்புடன் எடுத்துகொள்ளும்போது இடுப்பு எலும்பு மற்றும் மற்ற வகை எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது என்பதற்கு நம்பகமான ஆதாரங்களை காட்டின. வைட்டமின் டி மற்றும் கால்சியம் எடுப்பதனால் இறப்பின் அபாயத்தை அதிகரிக்கவில்லை என்று திறனாய்வு கண்டறிந்தது.

வைட்டமின் டி மற்றும் கால்சியம் எடுப்பதினால் ஏற்படும் தீய விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்து ( இரைப்பை (வயிறு) அறிகுறிகள் மற்றும் சிறுநீரக நோய் போன்ற) குறைந்தளவே என்றாலும்,சிலர் குறிப்பாக சிறுநீரக கற்கள், சிறுநீரக நோய், உயர் இரத்த கால்சியம் நிலைகள், இரைப்பை நோய் உள்ளவர்கள் அல்லது , யார் இதய நோய்ஆபத்தில் உள்ளனரோ அவர்கள், இந்த கூடுதல் பிற்சேர்ப்பு எடுப்பதற்கு முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர். குழு

Tools
Information