நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் தீவிரமாகுதல் காரணமாக ஏற்படும் மூச்சு செயலிழப்பிற்கான டாக்ஸாபிரம்

முற்றிய நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் கொண்ட சில மக்களில், இரத்தத்தின் பிராண வாயு குறைந்து மற்றும் கழிவு வாயுவான கரியமில வாயு சேர்ந்து அறிகுறிகளை மோசமாகி மூச்சு செயலிழப்பை ஏற்படுத்தும். இதின் உச்சகட்ட நிலைகளில், இரத்தத்தில் ஏற்படும் இந்த சமமின்மை கோமா மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும். மூச்சு செயலிழப்பு தீவிரமடையும் போது, பிராண வாயு மட்டும் அளிப்பது போதாது. ஏனென்றால், அதிகரிக்கும் கரியமில வாயு, நிலைமையை மேலும் மோசமாகி மூச்சு விடுவதற்கான இயல்பை குறைக்கும். டாக்ஸாபிரம் என்ற மருந்து மூச்சு விடுவதை தூண்டக் கூடியதாகும். இந்த மருந்து உதவக் கூடியதாக உள்ளது என சோதனைகளின் இந்த திறனாய்வு கண்டது, எனினும் சில புதிய மருந்துகள் மேலும் திறன் கொண்டவையாக இருக்க கூடும். குறுகிய-கால நடவடிக்கைக்கான மருந்தாக அல்லது பிற சிகிச்சைகள் இல்லாத பட்சத்தில் டாக்ஸாபிரம் பயனுள்ளதாக கருதப்படலாம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்.

Tools
Information