மக்கள் புகை பிடிப்பதை விடுவதற்கு லோபிலின் உதவுமா

லோபிலின் என்பது ஒரு இந்திய புகையிலை செடியின் இலைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு அல்கலாயிட் ஆகும் மற்றும் வணிகரீதியான புகை பிடித்தலை விடும் பரிகாரங்களுக்கு மிக பரவலாக பயன்படுத்தப்படுவதாகும். கிறுகிறுப்பு, குமட்டல், மற்றும் வாந்தி ஆகியவை அதின் பாதக விளைவுகளாகும், மற்றும் லோபிலினை கொண்ட மாத்திரைகள் மற்றும் இனிப்பு மருந்து வில்லைகள் தொண்டை எரிச்சலுக்கு வழி நடத்தும். மக்கள் புகை பிடிப்பதை விடுவதற்கு லோபிலின் உதவக் கூடும் என்பதற்கு ஆதாரத்தை அளிக்க போதுமான நீண்ட-கால சோதனைகள் எதையும் இந்த திறனாய்வு காணவில்லை. ஆறு வாரங்கள் பின்-தொடர் காலத்தைக் கொண்டிருந்த ஒரு பெரிய ஆய்வு, லோபிலின் ஒரு திறன்மிக்க சிகிச்சை அல்ல என்று பரிந்துரைக்கும் வகையில் அதின் குறுகிய-கால பயனிற்கு எந்த ஒரு ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information